கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை செட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
மேலும், லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட இதர விலையில்லா பொருட்களையும் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவு றுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2013-14-ம் கல்வி ஆண்டில் வழங் கப்பட்ட இலவச பஸ் பாஸ் அட்டையை ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள லாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
No comments:
Post a Comment