மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,'
என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்குகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்,
ஆங்கில வழிக்கல்வியில்
சிறந்து விளங்க வேண்டும். நர்சரி,
பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில்
கற்றுத்தருவதைப்போல் ஆங்கில
வழியில் கற்றுக்கொடுக்க வேண்டும்
என தமிழக
அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடப்பாண்டு பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற பலர்,
அரசு பள்ளிகளில்
இருந்து சுயநிதி மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம்
செல்லத் துவங்கினர்.
கல்வித்துறை அதிகாரிகள் மூலம்
இத்தகவல், அரசின்
கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயரதிகாரிகள் ஆலோசித்து, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
சுற்றிக்கை அனுப்பியுள்ளனர். அதில்,
தங்கள் மாவட்டத்தில் உள்ள
அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,
எத்தனை பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வி உள்ளது.
எத்தனை பள்ளிகளில் துவக்கவில்லை?
ஏன் துவக்கவில்லை? ஆசிரியர்
பற்றாக்குறை குறித்து விவரம்
கேட்கப்பட்டுள்ளது. மேலும்,
மாவட்டத்தில் உள்ள
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும்
ஆங்கில வழிக்கல்வி கொண்டு வர
வேண்டும் எனவும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
2010க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட
மேல்நிலைப்பள்ளிகள்
பெரும்பாலானவற்றில் ஆங்கில
வழிக்கல்வி இல்லை. 15 முதல் 20
ஆண்டுகளாக உள்ள
மேல்நிலைப்பள்ளிகளில்
மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்கள் பொறியியல் மற்றும்
இன்ஜினியரிங் சேர பிளஸ் 2
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்
பெற வேண்டும் என்பதை நினைவில்
கொண்டு, ஆங்கில வழி கல்வியில்
மேல்நிலைப்படிப்புகளை கற்க
விரும்புகின்றனர். சமீபத்தில் தரம்
உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆங்கில
வழி கல்வி இல்லாததால்,
வெளியேறுகின்றனர். இவற்றை தடுக்க,
ஆங்கில வழிக்கல்வியை துவக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment