Thursday, June 12, 2014

TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014)  நேரில்  வேண்டுகோள் விடுத்தனர்.

ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும்
காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG
தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ்
தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு
பணிநியமன ஆணை வழங்கப்படும் என
கல்வித்துறை உயர் அலுவலர்கள்
தெரிவித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
2013 முதுகலை தமிழ் ஆசிரியர்
பணி நியமனம்செய்யப்பட்டு சில
மாதங்கள் ஆன நிலையில் தங்கள்
நியமனம் குறித்து எந்த
ஒரு அறிவிப்பையும்வெளியிடாமல்
இருப்பது வேதனயளிக்கின்றது என
பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக
காத்திருக்கும்
தங்களுக்கு அரசு விரைவில்
பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ்
வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment