திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த கே.புதுக்கோட்டையை சேர்ந்தவர் தேக்கமலை. இவரது மகன் கோபிநாதன் (13). இவன் பொம்மக்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கோபிநாதன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபிநாதனை தேடினார்கள்.இதுபற்றி வையம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசாரும் சிறுவனை தேட தொடங்கினர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள ஒரு குளத்தின் கரையில் கோபிநாதன் அணிந்திருந்த ஆடைகள் இருந்தது. சந்தேகம் அடைந்து குளத்தில் தேடிய போது கோபிநாதன் மூழ்கி இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் குளத்தில் தனியாக குளித்த போது அவன் இறந்து போனது தெரிய வந்தது. அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment