தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி தனியார் ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகள் செல்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் குறித்த ஆய்வை தொடக்க கல்வித்துறை மேற்கொண்டது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 30 பள்ளிகளில் 17 தனியார் ஆங்கில வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படுவதற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தடை விதித்தார்.
அதன்படி, 2–ந் தேதி முதல் இப்பள்ளிகள் தடையை மீறி செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரூ.1 லட்சம் அபராதமும், நாள் ஒன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment