தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறியதாவது:
அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 480 தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான கவுன்சலிங் நேற்று அனைத்து மாவட்டத்திலும் நடந்தது. சென்னையில் 6 இடங்கள் காலியாக இருந்தும் ஒரே ஓரு இடம் காலி என காண்பித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 13 இடங்கள் காலியாக இருந்தும் 3 இடங்களே காண்பித்துள்ளனர். அனைத்து மாவட்டத்திலும் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதை கண்டிக்கிறோம். இது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
No comments:
Post a Comment