Sunday, June 15, 2014

ஆசிரியர் கல்வியில் விரைவில் அதிரடி மாற்றம்

அனைத்து நிலை ஆசிரியர் கல்வியிலும் விரைவில் அதிரடி சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது
என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதோடு, அனைத்து நிலை ஆசிரியர் படிப்புகளின் படிப்புக் காலமும் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:
உயர் கல்வி வழங்குவதில் தொலைதூரக் கல்வி முறையும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அதேநேரம், இந்த தொலைதூரக் கல்விக்கென ஒரு முழுமையான தேசிய கொள்கை எதுவும் இதுவரை இல்லை. இருந்தபோதும், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக் கவுன்சிலின் கீழ் தொலைதூர கல்வி நிறுவனங்கள் இயங்கியபோதும், தரமான தொலைதூரக் கல்வி வழங்குவது உறுதி செய்யப்பட்டது.
இந்த கல்வித் தரம் இப்போதும் தொலைதூரக் கல்வியில் காக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுபோல், ஆசிரியர் கல்வியிலும் தரத்தை உறுதி செய்வதற்காக மிகப் பெரிய சீர்திருத்தத்தை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் 90 சதவீதம் தனியார் கல்லூரிகளாகும்.
எனவே, தரத்தை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டி நெறிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கிகாரம் அளிக்கும் பணியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலே மேற்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும், ஆசிரியர் கல்வி பாடத் திட்டங்களில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதோடு, அனைத்து நிலை படிப்புகளின் படிப்புக் காலமும் அதிகரிக்கப்பட உள்ளது.
அதாவது, பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் இனி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் பிளஸ்-2 முடித்தவுடன் ஆசிரியர் கல்வியில் சேரும் வகையில், புதிய 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த தொடக்கக் கல்வி பட்டப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த இடைநிலைக் கல்வி பட்டப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எட்., மற்றும் பி.எஸ்சி.,பி.எட். படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உடற்கல்வி, மழலையர் கல்வியிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றார் அவர்.
விழாவில் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 227 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி. பழனியப்பன் பட்டச் சான்றிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கத்தை வழங்கினார்.
இவர்களில் பி.சி.ஏ. இளநிலை பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி அருள் பிரியங்காவுக்கு ரூ. 25,000 ரொக்கப் பரிசுடன் கூடிய ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மைய விருது வழங்கப்பட்டது.
இவர்களைத் தவிர ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த 11 மாணவர்களும், 4,751 முதுநிலை பட்டதாரிகளும், 12,808 இளநிலை பட்டதாரிகளும், 3,852 பட்டய மாணவர்களும், 92 முதுநிலை பட்டய மாணவர்களும் விழாவில் பங்கேற்காமல் பட்டம் பெற்றனர்.
Email1 Print A+ A A-
இந்த பகுதியில் மேலும்
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: 132 மாணவர்கள் 200-க்கு 200
முகாம்களில் உள்ள 6 காட்டு யானைகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர் ஜெயலலிதா
தாட்கோ மூலம் 645 பேருக்கு கடனுதவி: முதல்வர் வழங்கினார்
தூத்துக்குடியில் 105 டிகிரி வெயில்
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
45 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் ரூ.26.41 கோடியில் ஆதிதிராவிட-பழங்குடியின மாணவர் விடுதிகள்: முதல்வர் திறந்து வைத்தார்
மழைநீர் சேகரிப்புத் திட்டம்: விழிப்புணர்வு பிரசாரத்தில் பிரபலங்கள் பங்கேற்பு
வி.ஏ.ஓ. தேர்வு: 7.63 லட்சம் பேர் எழுதினர்
அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு
அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு
காவிரி பிரச்னையில் தமிழக அரசுக்கு பாஜக முழு ஆதரவு: இல. கணேசன்
கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம்
முதல்வர் அலுவலகத்தில் சோனியா படம்: என்.ரங்கசாமிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்

No comments:

Post a Comment