தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி புரியும், தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு, இந்த ஆண்டு ஜூன் மாதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கலந்தாய்வு, காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணையை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூன் 16-ஆம் தேதி காலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற உள்ளது. அன்று பிற்பகலில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஜூன் 17-ஆம் தேதி காலை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், ஜூன் 17-ஆம் தேதி பிற்பகல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, ஜூன் 18-ஆம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல், அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 19-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஜூன் 21-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், ஜூன் 23-ஆம் தேதி பிற்பகல் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூன் 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு, ஜூன் 25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஜூன் 26-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஜூன் 28-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறும்
No comments:
Post a Comment