தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, கடந்த
மூன்று ஆண்டுகளாக கோடை விடுமுறையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, கடந்த
மூன்று ஆண்டுகளாக கோடை விடுமுறையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
இதனால், விடுமுறை காலம்
எங்களுக்கு கசப்பான அனுபவம் என,
புலம்புகின்றனர்.கடந்த 2012, மார்ச் மாதம்,
மாவட்டத்தில் 700 பகுதி நேர
சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாரத்தில்,
மூன்று அரை நாட்கள் மட்டும் வேலை.
அதற்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் என,
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில்,
கோடை விடுமுறை மற்றும்
அரையாண்டு விடுமுறை நாட்களுக்கு சம்பளம்
கிடையாது. ஆனால், சிறப்பு உத்தரவின்
பேரில், அரையாண்டு விடுமுறை மற்றும்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வேலை நாட்கள்
குறைந்த போது, முழு சம்பளம் வழங்கப்பட்டது.
ஆனால், 2012 முதல், நடப்பு ஆண்டு வரை,
மே மாதம் கோடை விடுமுறையின் போது மட்டும்
சம்பளம் வழங்க, அரசு எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை.
பணி நியமன உத்தரவில், இந்த
நிபந்தனை குறிப்பிடப்பட்டிருந்தாலும்,
அரசு இவர்களின்
கோரிக்கையை ஏற்று சம்பளம் வழங்கும் என,
எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து, பெயர்
வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர்
கூறுகையில், மே மாதம் சம்பளம் இல்லாததால்,
மிகவும் சிரமப்படுகிறோம். வழக்கமான
ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று
எங்களுக்கும் மே மாதம் சம்பளம் வழங்க
அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'
என்றார்.
No comments:
Post a Comment