ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில், வெற்றி பெற்றவர்களை பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
மேலும் பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்வர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு புதிய வெயிட்டேஜ் முறையை தயாரித்துள்ள தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும். 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும். D.T.Ed/D.E.Ed-ல் அதிகபட்சமாக 25 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment