Tuesday, July 15, 2014

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இதுதொடர்பான
அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்
தெரிவித்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்
தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள்
தொடரப்பட்டதால் ஆசிரியர்
பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த
முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள்
முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான
பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்
பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment