Monday, September 29, 2014

தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; கண்ணீர் விட்டு அழுதபடி பொறுப்பேற்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.,
சிறையில் அடைக்கப்பட்டதால்
அவர் பதவி இழந்தார்.

தொடர்ந்து ஜெ., தலைமையிலான
அரசும் பதவி இழந்தது.
இதனையடுத்து தமிழகத்தில்
2வது முறையாக
ஓ.பன்னீர்செல்வம்
இன்று முதல்வராக
பதவியேற்று கொண்டார். இவருடன்
30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
தொடர்ந்து அவர்கள்
பெங்களூரு சென்று ஜெ.,வை சந்தித்து பேசி ஆசி வாங்க
முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவரவர்கள் ஏற்கனவே வகித்த
பொறுப்பை வகிப்பர் என தெரிகிறது.
இன்று கவர்னர் மாளிகையில் பதவியேற்ற
போது ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட
அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
மதியம் 2 மணியளவில் கவர்னர் மாளிகையில்
பதவியேற்பு விழா நடந்தது. விழா எளிமையாக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கவர்னர்
ஒவ்வொரு பெயராக பொறுப்பேற்க
வருமாறு அழைத்தார். முதலில் வந்த
பன்னீர்செல்வம் , தனது சட்டைப்பையில் இருந்த
ஜெ., படத்தை எடுத்து முன்னாடி வைத்தார்.
கண்ணீர் ததும்ப , குரல்
நடுங்கியபடி உறுதிமொழி எடுத்தார்.
தனது கையில் இருந்த கர்ச்சிப்
கொண்டு கண்ணீரை துடைத்தார்.
குரல் தழு, தழுத்தனர்: தொடர்ந்து வந்த
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சுப்பிரமணியன்,
வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள்
கண்ணீர் விட்டு குரல் தழு, தழுத்தனர்.
இந்நிகழ்ச்சி சோகமயமாகவே இருந்தது.
அனைவரும் அழுதபடி கவர்னர்
ரோசையாவை கும்பிட்டபடி சென்றனர்.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த
பதவியேற்பு விழா நடந்தது.
பத்திரிகையாளர்கள் யாருக்கும்
தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment