Monday, September 29, 2014

முதல்வர் ஆனார் ஓ.பி.எஸ்.; ஜெயாவிடம் ஆசி பெற பெங்களூர் பயணம்

தமிழகத்தில் 2வது முறையாக
ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்று கொண்டார்.
இவருடன் 30
அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
பதவியேற்றதும் அமைச்சர்கள்
தலைமை செயலகம் செல்கின்றனர்.
தொடர்ந்து அவர்கள்
பெங்களூரு சென்று ஜெ.,வை சந்தித்து பேசி ஆசி வாங்க
முடிவு செய்திருப்பதாகவும்
கூறப்படுகிறது.
பதவியேற்பின்போது அமைச்சர்கள் பலரும்
கண்ணீர் விட்டு அழுதனர்.
பதவியேற்பு விழா சோகமாவே நடந்தது.
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும்
எம்.எல்.ஏ., பதவி ரத்தானதால்,
சட்டசபை அ.தி.மு.க., தலைவராக,
ஓ.பன்னீர்செல்வம்
நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று,
தமிழக முதல்வராக பொறுப்பேற்கலாம் எனத்
தெரிகிறது. இதையடுத்து, 'அம்மா'
திட்டங்கள் தொடருமா என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில்,
ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்குப்
பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை அடுத்து, தமிழகத்தின் அடுத்த
முதல்வர் பதவிக்கான ஆலோசனை, நேற்று,
சென்னையில் நடந்த எம்.எல்.ஏ., கூட்டத்தில்
நடந்தது.கூட்டத்தில், அ.தி.மு.க., அவைத்
தலைவர் மதுசூதனன், 'ஜெயலலிதா,
ஒரு தீர்மானம் கொடுத்து அனுப்பி உள்ளார்.
அதை படிக்கிறேன்' எனக் கூறி,
'சட்டசபை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
தலைவராக, ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக
தேர்வு செய்யப்படுகிறார்' என,
அறிவித்தார்.பின், மாலை, 6:15 மணிக்கு,
கவர்னர் மாளிகைக்கு சென்ற
பன்னீர்செல்வம், கவர்னர் ரோசய்யாவிடம்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்,
தன்னை சட்டசபை தலைவராக,
தேர்வு செய்ததற்கான
கடிதத்தை வழங்கினார்.
திட்டங்கள் கதி?அதை ஏற்ற கவர்னர்
ரோசய்யா, புதிய
அமைச்சரவையை அமைக்கும் படி,
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்தார்தமிழகத்தில்,
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'அம்மா'
பெயரில் பல்வேறு திட்டங்கள்
கொண்டு வரப்பட்டன. இதில், மக்கள்
இருக்கும் இடங்களுக்கே, வருவாய்
அதிகாரிகள் நேரில் சென்று, மனுக்கள்
பெற்று தீர்வு காணும், 'அம்மா திட்டம்'
முதலில் துவங்கப்பட்டது.தொடர்ந்து,
'அம்மா உணவகம், அம்மா குடிநீர்,
அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள்,
அம்மா பரிசு பெட்டகம், அம்மா விதைகள்,
அம்மா சிமென்ட்' போன்ற திட்டங்களும்
அறிவிக்கப்பட்டன.இத்திட்ட
விளம்பரங்களிலும், பேனர்களிலும், 'அம்மா'
என்ற பொதுவான பெயர் இருந்தாலும்,
ஜெயலலிதா படம் இடம் பெற்றுஉள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின்
படத்தை, அரசு திட்டங்களில்
பயன்படுத்தலாமா என்பது குறித்து,
முடிவெடுக்க வேண்டிய நிலையில்,
அரசுதள்ளப்பட்டுள்ளது.
ஜாமின் கோரி இன்று மனு:
சொத்து குவிப்பு வழக்கில்,
தண்டனை பெற்றுள்ள, அ.தி.மு.க.,
பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஜாமின்
வழங்கக் கோரியும், அவரை குற்றவாளி என,
அறிவித்ததற்கும், அவருக்கு விதிக்கப்பட்ட
தண்டனைக்கும் தடை விதிக்கக் கோரி,
கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இன்று,
அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்
செய்தனர்.
நாளையே விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படலாம் என தெரிகிறது.
Advertisement
இரண்டாவது முறை: அ.தி.மு.க., வின்
பொருளாளரும், நிதியமைச்சருமான
ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜன., 14ம்
தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில்
பிறந்தார்.1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
பெரியகுளம் நகராட்சி தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001
சட்டசபை தேர்தலில் பெரியகுளம்
தொகுதியில் இருந்து, முதன்முறையாக
எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மே 19ம் தேதி,
ஜெயலலிதா தலைமையிலானஅமைச்சரவையில்
வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார்.
பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா,
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி பதவியில்
இருந்து ராஜினாமா செய்தார்.இதையடுத்து செப்.,
21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002
மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார்.
பின் முதல்வராக மீண்டும்
ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர்
பொதுப்பணித்துறை அமைச்சராக
பொறுப்பு வகித்தார். பின் 2006
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,
ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில்
பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும்
எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும்
பதவிவகித்தார். 2011 சட்டசபை தேர்தலில்
போடி தொகுதியில்
இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக
தேர்ந்தெடுக்கப்ட்டார்.
இம்முறை நிதி அமைச்சராக
பொறுப்பேற்றார். மேலும் அ.தி.மு.க., வின்
பொருளாளராகவும் இருக்கிறார்.

No comments:

Post a Comment