தமிழகத்தில் 1 முதல் 9ம்
வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன.
இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது.வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன.
இதுபோல் 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ்2 மாணவர்களுக்கும்
பொதுத்தேர்வு போல்
பொது வினாத்தாள்
தயாரித்து வழங்கப்பட்டு
அரையாண்டுத் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்பினருக்கும் இன்றுடன்
தேர்வுகள் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அனைத்துப்
பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ்
மற்றும் புத்தாண்டை முன்னிட்டு
அரையாண்டு விடுமுறை
விடப்படுகிறது.
விடுமுறைக்குப் பின்னர் அரசுப்
பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார்
பள்ளிகள் ஜனவரி 2ம்
தேதி திறக்கப்படுகின்றன. சில
தனியார் பள்ளிகள் ஜனவரி 5ம்
தேதி திறக்கப்படும் என
அறிவித்துள்ளன.
அரையாண்டு விடுமுறைக்குப்
பின்னர் பள்ளிகள் திறக்கப்படும்
முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய
பாட புத்தகங்கள் 1 முதல் 9ம்
வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment