Tuesday, December 23, 2014

நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

3 மாதங்களுக்கு மேல் நிலுவையில்
உள்ள கோப்புகளை உடனடியாக
முடிக்குமாறு மாவட்ட தொடக்கக்
கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர்
அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடக்கக்
கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன்,
மாவட்ட தொடக்கக்
கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி
யுள்ள உத்தரவில் கூறியிருப்
பதாவது: மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலகத்தில் 3
மாதங்களுக்கு மேல் நிலுவையில்
உள்ள
கோப்பு களை பிரிவு வாரியாக
பட்டிய லிட்டு மின்னஞ்சல் மூலம்
அனுப்ப வேண்டும். இதேபோல்,
உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்
களிலும் 3 மாதங்களுக்கு மேலாக
நிலுவையில் உள்ள
கோப்பு களை பிரிவு வாரியாக
பட்டிய லிட்டு உடனடியாக
முடிக்கு மாறு அனைத்து உதவி
தொடக்கக்கல்வி அதிகாரிகளும்
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவி தொடக்கக்கல்வி அலுவ
லகங்களில் நிலுவையில் உள்ள
கோப்புகளை முடித்த விவரங்
களை டிசம்பர் 26-ம் தேதிக்குள்
மின்னஞ்சல் மூலம்
இயக்குநருக்கு அனுப்புமாறு
அனைத்து மாவட்ட
தொடக்கக்கல்வி அதிகாரிகளும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment