பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் இந்த
ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40
ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க
உள்ளனர்.
இந்தத் தேர்வுக்காக 299ஆண்டு சென்னை மாவட்டத்தில் 40
ஆயிரத்து 640 மாணவர்கள் பங்கேற்க
உள்ளனர்.
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு கட்டங்களாக செய்முறைத்
தேர்வு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-
ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும்,
பிப்ரவரி 13 முதல் 20-ஆம்
தேதி வரை இரண்டாம் கட்டமாகவும்
செய்முறைத் தேர்வு நடைபெற
உள்ளது. பிளஸ் 2 செய்முறைத்
தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டம்,
சென்னை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அனிதா தலைமையில்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திலுள்ள 416
மேல்நிலைப் பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் இந்தக் கூட்டத்தில்
பங்கேற்றனர். இதில் தேர்வு அட்டவணை,
மேற்பார்வையாளர்கள் நியமனம் உள்ளிட்ட
பல்வேறு விஷயங்கள் தொடர்பாக
ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment