Sunday, February 01, 2015

வாசிப்பு திறனை மேம்படுத்த பத்திரிகைகள் வாங்க வேண்டும்: கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்

'அரசு பள்ளிகளில், மாணவர்களின், தமிழ்,
ஆங்கில வாசிப்புத்திறனை மேம்படுத்த, தினமும் பத்திரிகைகள் வாங்க,
தலைமை ஆசிரியர்களிடம்
வலியுறுத்தப்படும்' என, கல்வி துறை அதிகாரிகள் கூறினர்.

தலைப்பு செய்திகள்:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மாணவர்களின் வாசிப்புத்
திறனை அதிகரிக்க, பள்ளிக்
கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது
. ஒவ்வொரு பள்ளியிலும், காலையில்
அன்றாட தமிழ் பத்திரிகைகளின்
தலைப்புச் செய்திகள்
வாசிப்பு பின்பற்றப்படுகிறது. மேலும்,
வகுப்பறை நேரம் தவிர்த்து, பிற
நேரத்தில், மாணவர்களின் வாசிப்புத்
திறனை மேம்படுத்த, நூலகத்தில் தமிழ்,
ஆங்கில பத்திரிகையை படிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்த,
ஒவ்வொரு பள்ளிக்கும்
உத்தரவு உள்ளது.
பத்திரிகை வாங்குவதற்கு என,
பள்ளி மானிய நிதியில் இருந்து, 10
ஆயிரம் ரூபாய் வரை செலவிடவும்
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல பள்ளி களில்
பத்திரிகைகள் வாங்கப்பட்டாலும்,
காலை யில் வகுப்பு துவங்கியதும்,
செய்தி வாசிப்பது பெரும்பாலான
பள்ளி களில்
கடைபிடிப்பது இல்லை என்ற தகவல்
வெளியாகிஉள்ளது. கிராமப்புற
பள்ளிகளை காரணம் காட்டி, சில
தலைமை ஆசிரியர் கள்,
தங்களது வீடுகளில்
காலை பேப்பர்களை வாங்கி விட்டு,
அவற்றை பள்ளிக்கு எடுத்துச்
செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும்
எழுந்துள்ளது. இது போன்ற சில
குறைபாட்டால், மாணவர்களின்
வாசிப்பு திறனை மேம்படுத்துவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வி துறை அதிகாரிகள்
கூறியதாவது:
சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ்,
ஒவ்வொரு பள்ளிக்கும் மானிய
நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை,
பத்திரிகைகளுக்கென
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்:
தலைமை ஆசிரியர்கள் விரும்பினால்,
மானிய நிதியில் பிற
செலவை குறைத்து,
பத்திரிகைகளை வாங்கி, வாசிப்புத்
திறனை மேம்படுத்தலாம்.
பத்திரிகைகளை படிக்க படிக்கத்தான்,
கிராமப்புற
மாணவர்களுக்கு வாசிப்பு திறன்
அதிகரிக்கும். ஒன்பதாம்
வகுப்பு வரை முன்னேறிய
சிலருக்கு கூட, வாசிப்பு திறன்
குறைபாடு இருப்பதை அறிய
முடிகிறது. வாசிப்பு திறனை வளர்க்க,
தமிழ், ஆங்கில பத்திரிகை வாங்காத
பள்ளிகளில், பத்திரிகைகள் வாங்க
வலியுறுத்தப்படும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.

No comments:

Post a Comment