அனைவருக்கும் கல்வி இயக்ககம்
சார்பில், அரசு பள்ளி மாணவர்களின்
"வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன்
குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.
சார்பில், அரசு பள்ளி மாணவர்களின்
"வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன்
குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.
வாசித்தல் மற்றும் எழுதுதல்
திறனை மேம்படுத்தும் வகையில்,
மாணவர்களுக்கு எளிமையான
முறையில் கற்றல் உள்ளிட்ட
பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய
செயல்பாடுகளால், அவர்கள்
இடையே ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தை கண்டறிவதற்கு,
ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது;
அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர்
பயிற்றுனர்களின் மூலம், ஆய்வும்
நடத்தப்படுகிறது.அதன்படி, திருப்பூர்
மாவட்ட அரசு துவக்க, நடுநிலை,
உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில், வட்டார வள
மைய ஆசிரியர் பயிற்றுனர்கள்
ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளி, 293
நடுநிலைப்பள்ளி, 93 உயர்நிலைப்பள்ளி,
96 மேல்நிலைப்பள்ளிகளில்,
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் படிக்கின்றனர்.ஆங்கிலம்,
தமிழ் மற்றும் கணிதப்பாடங்களில், 2
முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவ,
மாணவியரின் வாசித்தல் மற்றும்
எழுதுதல் திறன் குறித்து, 2ம் கட்ட
ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த
ஆக., மற்றும் செப்., மாதங்களில்,
முதற்கட்ட ஆய்வு நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,
"முதற்கட்ட ஆய்வு நடத்தி, "ஏ', "பி', "சி',
"டி' கிரேடு மதிப்பீடுகள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மீண்டும்
தற்போது ஆய்வு நடக்கிறது.
இவ்விரு ஆய்வு மதிப்பீடுகளை
கொண்டு, மாணவர்களின் திறன்
அளவிடப்படுகிறது. முதற்கட்ட ஆய்வில்,
ஆங்கிலத்தில் மாணவர்களின்
செயல்பாடுகள் குறைவாக இருந்தன,'
என்றனர்.
No comments:
Post a Comment