ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடந்த பிரசாரத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி முன்னிலையில் மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பங்கேற்றிருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பள்ளி மாணவ, மாணவிகளைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அமைச்சர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் மனு அளித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று சந்தீப் சக்சேனா உறுதி அளித்திருந்தார்.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பழனிசாமியிடம் நேற்று இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கலெக்டர் கூறுகையில், ‘இதுதொடர்பாக தனிக்குழு விசாரித்து வருகிறது. மாணவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இது எதேச்சையாக நடந்த சம்பவம் என பள்ளி கல்வித்துறை தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளித்துள்ளது‘ என்றார்.
No comments:
Post a Comment