சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத்
தேர்வுகள் நாடு முழுவதும்
திங்கள்கிழமை தொடங்குகின்றன.
மார்ச் 2- இல் தொடங்கும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும்தேர்வுகள் நாடு முழுவதும்
திங்கள்கிழமை தொடங்குகின்றன.
நடைபெற உள்ளன. 10-ஆம் வகுப்பில்
பள்ளி அளவிலான தேர்வு மார்ச் 10-ஆம்
தேதி தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து 16
ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத்
தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக
சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் சுதர்சன ராவ்
தெரிவித்தார்.
சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 தேர்வை 70
ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத்
தேர்வை 1.7 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுவோரின்
எண்ணிக்கை அதிகரிப்பு: 10-ஆம் வகுப்புத்
தேர்வை நிகழாண்டு நாடு முழுவதிலும்
3,537 தேர்வு மையங்களிலிருந்து 13,73,853
பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 3,164
தேர்வு மையங்களிலிருந்து 10,40,368 பேர்
எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ஆம்
வகுப்புத் தேர்வு எழுதுவோரின்
எண்ணிக்கை 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின்
எண்ணிக்கை 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வுகளைக் கண்காணிக்க சிறப்புப்
பார்வையாளர்கள், பறக்கும் படைகள்
ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக
சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கட்டுகள் 4
உதவி கண்காணிப்பாளர்களின்
முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும் என
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பில் பார்வையற்றோர் 391
பேரும், கற்றலில் குறைபாடுடையவர்கள்
988 பேரும், காது கேளாதோர், வாய் பேச
இயலாதோர் 225 பேரும், உடல் ஊனமுற்றோர்
904 பேரும், மன வளர்ச்சி, அறிவுத் திறன்
குறைபாடுடையவர்கள் 147 பேரும்
எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் பார்வைற்ற 363 பேர் உள்பட
மொத்தம் 2,066 பேர் இந்தத்
தேர்வை எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்காக
கூடுதலாக 1 மணி நேரம்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகுப்புகளுக்கான
தேர்வு முடிவுகள் மே மாதத்தில்
வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ.
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment