Monday, March 02, 2015

'டான்செட்' தேர்வு விண்ணப்பங்கள்ஏப்.,1 முதல் 20 வரை வினியோகம்

டான்செட்' தேர்வு, வரும் மே மாதம்
நடக்கிறது. விண்ணப்பங்கள் வரும்
ஏப்.,1முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும்'
என,
அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
முதுகலை இன்ஜி.,- எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட
படிப்புகளுக்கு,
பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்'
மூலம் மாணவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் இத்தேர்வில் பங்கேற்க,
லட்சக்கணக்கான மாணவர்கள்
விண்ணப்பிப்பது வழக்கம்.
இவ்வாண்டுக்கான, 'டான்செட்' தேர்வு,
வரும் மே மாதம் நடக்கிறது.
விண்ணப்பங்கள் வரும் ஏப்.,1 முதல் 20ம்
தேதி வரை வழங்கப்படும் என,
அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ஏப்.,
22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மே 16, 17ம்
தேதிகளில் தேர்வுகள் நடக்கின்றன.
எம்.சி.ஏ.,வுக்கான
நுழைவுத்தேர்வு மே16, காலை 10:00
மணி 12:00 மணி வரையும், எம்.பி.ஏ.,
நுழைவுத் தேர்வு பிற்பகல் 2:30முதல்
மாலை, 4:30 மணி வரையும்
நடக்கிறது.அதேபோல், எம்.இ., - எம்.டெக்.,
படிப்புகளுக்கான நுழைவு தேர்வு,
மே 17, காலை 10:00 முதல் 12:00
வரை நடக்கும். கடந்த ஆண்டு, 'டான்செட்'
தேர்வுக்கு, ஆன்லைன்
மூலமே விண்ணப்பிக்க
வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வாண்டு, ஆன்-
லைனில் மட்டுமின்றி, நேரடி விண்ணப்பம்
பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment