Tuesday, April 07, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச்
சேர்ந்த மாணவர்களுக்கு வரும்
கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள்
விநியோகம் தொடங்கியுள்ளது.
இந்த வார
இறுதிக்குள் மாணவர்களுக்கான
புத்தகங்கள் முழுமையாக
விநியோகிக்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பொதுத்தேர்வு மாணவர்கள் கோடை
விடுமுறையிலும் படிக்கும் வகையில்
பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான
புத்தகங்கள் இந்த ஆண்டு ஏப்ரல்
மாதத்திலேயே விநியோகம்
செய்யப்படுகின்றன.
அதன்படி, அரசு, அரசு உதவி பெறும்
பள்ளிகளுக்கான பிளஸ் 2 புத்தகங்கள்
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில்
பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2
புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது.
விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான
மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள்
திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த
வார இறுதிக்குள் அனைத்து
மாணவர்களுக்கும் புத்தகங்கள்
விநியோகிக்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு....
தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2
புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல்,
கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார
அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த
அலுவலகங்களில் பணத்தைச் செலுத்தி
தனியார் பள்ளிகள் புத்தகங்களைப்
பெற்றுக்கொள்ளலாம்.
சில்லறை விற்பனை எப்போது?
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான
புத்தக விநியோகம் நிறைவடைந்த பிறகே
பிளஸ் 2 புத்தகங்களின் சில்லறை விற்பனை
தொடங்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள்
நிறைவடைந்த பிறகு அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான
புத்தக விநியோகம் தொடங்கும் எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment