சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய
ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சிஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2
தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள்,
கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள்
உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு
சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் தேர்வும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இரண்டாம் தாள் தேர்வும் எழுத வேண்டும். இந்த ஆண்டு மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி
நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 1-
ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வு முடிவுகள் குறித்த
விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்: முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 7,522 பேர் எழுதினர். இவர்களில் 37,153 பேர் (17.90) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் எழுதினர். இவர்களில் 43,034 பேர் (9.16 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள்
தேர்வில் பொதுப்பிரிவில் 25.18 சதவீதம்,
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் 17.19 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 10.77 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 6.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டாம் தாள் தேர்வில் பொதுப்பிரிவில்
13.80 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர்
பிரிவில் 8.23 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 3.88
சதவீதம், எஸ்.டி. பிரிவில் 4.86 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி விகிதம் முதல் தாளில் 11.95 சதவீதமாகவும், இரண்டாம் தாளில் 2.80 சதவீதமாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment