பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
2006-07ம் ஆண்டு 1ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் முதன் முதலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்பாடத்தை பகுதி 1ல் கட்டாயமாக எழுத வேண்டும்.
பகுதி 1ல் தமிழ்மொழி பாடம் தவிர பிற மொழியை பயின்று வந்த மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் பகுதி 1ல் தமிழ்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி தாளாளரும் பொறுப்பேற்க வேண்டும். வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1ல் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும். பிற மொழிகளில் எழுத முடியாது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்

No comments:
Post a Comment