பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ள, விலையில்லா சைக்கிள் பாகங்களை, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், சைக்கிள் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.
அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்பில் படிக்கும், மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
வழக்கமாக, பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை முடிந்த பின், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், சைக்கிள்கள் கொள்முதல் செய்து அதிகாரிகள் வழங்கினர். இதனால், பிளஸ் 1 வகுப்பை முடிக்கும் போது தான், மாணவ, மாணவியருக்கு, சைக்கிள் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல், சைக்கிள்களை கொள்முதல் நடவடிக்கை, முன்னதாகவே துவங்கப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே, சைக்கிள் நிறுவனங்கள், நேரடியாக பள்ளிக்கு தேவையான சைக்கிள் பாகங்களை அனுப்ப துவங்கியுள்ளன. தற்போது, பெரும்பாலான பள்ளிகளுக்கு, விலையில்லா சைக்கிள் பாகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. அவற்றை சைக்கிள்களாக மாற்றும் பணி துவங்க உள்ளது. மே இறுதியில், இலவச சைக்கிள் வினியோகத்துக்கு தயாராகிவிடும் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்

No comments:
Post a Comment