Tuesday, June 02, 2015

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரத்தில் புதிய பயண அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
புதிய இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. பயண அட்டை தயாரிக்கும் பணியில் கல்வித்துறையினருடன் இணைந்து  போக்குவரத்து துறையும் பணியாற்றி வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment