Saturday, July 11, 2015

அறிவியல் விருது கண்காட்சி வரும் 15க்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு 'அறிவியல் புத்தாக்க விருது' (இன்ஸ்பயர் அவார்டு) வழங்கப்படுகிறது.
இதற்காக பள்ளிகளில் அறிவியல் திறன் படைத்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் இணைய தளம் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது.இதில் தேர்வு செய்யப்பட்டமாணவருக்கு தலா ரூ.5 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.


 இத்தொகையில் மாணவர்கள்அறிவியல் கண்காட்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி, அதில் தயாராகும் புதிய கண்டுபிடிப்பை கண்காட்சிக்கு வைக்க வேண்டும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் 7 சதவீதம் பேர் மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு அறிவியல் தொழில்
நுட்பக்கழகம், தமிழக பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15க்குள் அனைத்து பள்ளிகளிலும் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment