சென்னையிலுள்ள,ஸ்டெல்லா மேரிஸ்
கல்லூரி சுற்றுச்சுவரின் இரண்டு புறங்களிலும், மாணவியர் வரைந்த,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்கள்,
அந்த பகுதியில்கல்லூரி சுற்றுச்சுவரின் இரண்டு புறங்களிலும், மாணவியர் வரைந்த,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்கள்,
செல்வோரின், ஒட்டுமொத்த கவனத்தை,
ஈர்த்து வருகின்றன.
வெட்டப்பட்ட மரங்களுக்கு நடுவே நின்று,
மழை வராதா என, ஏக்கத்தோடு பார்க்கும்
முதியவர்; ஓசோன் படலத்தை கிழித்து,
பூமியை விழுங்கப் பார்க்கும் வெப்பம்;
வனத்தை அழித்ததால், துப்பாக்கியை தூக்க
ஏற்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட சூழல் என, நவீன
ஓவியங்களால் நிறைந்துள்ளது,
ஸ்டெல்லா மேரி கல்லூரியின்
சுற்றுச்சுவர்.இக்கல்லூரியின், நுண்கலைத்
துறை மாணவியர், கடந்த, 8 முதல் 16ம்
தேதி வரை, கல்லூரியின் சுற்றுச்சுவரில்,
நவீன ஓவியங்கள், எல்லோர் கவனத்தையும்
ஈர்த்து வருகின்றன.மனிதர்கள் காலடித்தடம்
படாத வரையில், சுற்றுச்சூழல்
எப்படி இருந்தது; காடுகளை அழித்து,
குடியிருப்புகளை அமைத்த பின்,
சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது ஆகிய
இரண்டு கருத்துகளை அடிப்படையாகக்
கொண்டு, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மனிதர்களின் பேராசையால், என்னென்ன
மாற்றங்கள், பூமியில் நிகழ்கின்றன
என்பது குறித்த ஓவியங்கள், எல்லோர்
கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக,
காடுகள் செழிப்பாக இருந்தவரை, ஆணும்
பெண்ணும் சரிநிகரென இருந்தனர்;
காடுகளை அழித்த பிறகே, பாகுபாடுகள்
துவங்கின என்பதை எடுத்துரைக்கும்,
ஓவியங்கள் நுட்பமாக வரையப்பட்டுள்ளன.
இரண்டு புறங்களிலும், 26 ஓவியங்கள்
வரையப்பட்டுள்ளன. துறையின், இரண்டு,
மூன்று, நான்காவது ஆண்டு மாணவியர்,
ஓவியங்கள் வரைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஓவியத்துக்கும், நான்கு மாணவியர்
வீதம், 103 மாணவிகள், வரைந்துள்ளனர்.
ஓவியங்களுக்கு இடையே, வரையப்பட்ட
காலடித்தடங்கள், ஓவியங்களுக்கு கூடுதலாக
அழகு சேர்க்கின்றன.
இதுகுறித்து, துறை பேராசிரியர்கள்
கூறியதாவது: 'ஆர்ட் சென்னை' அமைப்பினர்,
ஓவியங்கள் குறித்தும், சுற்றுச்சூழல்
குறித்தும், பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;
எங்களோடு துணை நில்லுங்கள் என,
கோரிக்கை விடுத்தனர். சுற்றுச்சூழல்
விழிப்புணர்வில், எங்கள் பங்கும் இருக்க
வேண்டும் என்பதற்காக, எங்கள்
கல்லூரி சுற்றுச்சுவரிலேயே, வரைய
ஏற்பாடு செய்தோம். ஒரு வாரமாக,
துறை மாணவியர், ஓவியம் வரைவதில்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.வரையும்
போதே, பொதுமக்களிடமிந்து உற்சாக
வரவேற்பு இருந்தது. ஆட்டோவில்
பள்ளிக்கு போகும் மாணவர் கூட,
இறங்கி பாராட்டிச் சென்றனர். அதுவே,
எங்களுக்கு மிகுந்த
உற்சாகத்தை ஈடுபடுத்தியது. இப்போதும்,
அப்பகுதியில் பயணிப்போர் மனதில்,
ஓவியங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என,
நம்புகிறோம். அதில்,
ஒருவராவது திருந்தினால் எங்கள் உழைப்பு,
முழுமை பெறும். ஓவியம் வழியாக,
விழிப்புணர்வு ஏற்படுத்த,
யாராவது முயன்றால், எங்கள் மாணவியர்,
அதற்கு துணை நிற்பர்.இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
No comments:
Post a Comment