Sunday, June 15, 2014

எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு: 132 பேர் 200க்கு 200 'கட் ஆப்' பெற்று அபாரம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்
கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

இதில், 132 பேர், 200க்கு 200,
'கட் ஆப்' மதிப்பெண்
பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்
கல்லூரி; ஒரு பல் மருத்துவக்
கல்லூரியும் உள்ளன. இதில், 2,172
எம்.பி.பி.எஸ்., இடங்கள், 85 பி.டி.எஸ்.,
இடங்களும் உள்ளன. இதுதவிர,
சுயநிதி கல்லூரிகளில் இருந்து,
மாநிலத்திற்கு ஒதுக்கப்படும்
இடங்களையும் சேர்த்து, மாணவர்
சேர்க்கை நடக்க உள்ளது. சென்னை,
கீழ்ப்பாக்கம், மருத்துவக்
கல்வி இயக்குனரகத்தில், சுகாதாரத்
துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர
வரிசை பட்டியலை,
நேற்று வெளியிட்டார். துறைச் செயலர்
ராதாகிருஷ்ணன், மருத்துவக்
கல்வி இயக்குனர் கீதா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார்,
நிருபர்களிடம் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கு, ஆண், 10,105; பெண், 14,434
பேர் என, மொத்தம், 27,539 பேர் போட்டியில்
உள்ளனர். முதல் பட்டதாரிகளாக, 10,061
விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தர
வரிசை பட்டியலில், எப்போதும் இல்லாத
வகையில், 132 பேர், 200க்கு 200 கட் ஆப்
பெற்றுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வு,
இம்மாதம், 18ம் தேதி துவங்குகிறது.
அதற்குமுன், 17ம் தேதி, மாற்றுத்
திறனாளி உள்ளிட்ட,
சிறப்பு பிரிவுகளுக்கான
கலந்தாய்வு நடத்தப்படும்.
ஜூலை, 3ம் தேதி, இரண்டாம் கட்ட
கலந்தாய்வு துவங்கும். செப்., 1ம் தேதி,
வகுப்புகள் துவங்கும். மாணவர்கள்
சேர்க்கை, செப்., 30 வரை நடத்தப்படும்.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், 500
ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
''மருத்துவ, 'கட் ஆப்' மதிப்பெண்ணில்,
ஏராளமானோர், ஒரே மதிப்பெண்
பெற்றுள்ளதால், அரசு மருத்துவக்
கல்லூரிகளில் இடம் கிடைப்பதில், கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது,'' என, கல்வியாளர்
ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
பொதுப் பிரிவு மாணவர்கள், 199.25
மதிப்பெண் வாங்கியிருந்தால்
மட்டுமே இடம் கிடைக்கும்.
மருத்துவக் கலந்தாய்வில்,
இதுவரை இல்லாத அளவிற்கு,
நடப்பாண்டு மிகக் கடுமையான
போட்டி ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும்,
ஒரே, 'கட் ஆப்' மதிப்பெண்ணில், 100 - 150
பேர் மட்டும் இருப்பர். இந்த ஆண்டு, 300
பேர் உள்ளனர். இதனால், அரசு மருத்துவக்
கல்லூரி களில், கடந்த ஆண்டுடன்
ஒப்பிடும் போது, நடப்பாண்டில், 'கட் ஆப்'
மதிப்பெண், 1.25 உயரும்.
சுயநிதி கல்லூரிகளில், 1.50 மதிப்பெண்
உயர வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு,
அரசு மருத்துவக் கல்லூரிகளில்,
பொதுப் பிரிவு மாணவர்கள், 198
மதிப்பெண் வாங்கியிருந்தால் இடம்
கிடைத்தது. தற்போது, 199.25 மதிப்பெண்
வாங்கியிருந்தால் மட்டுமே இடம்
கிடைக்கும். கடந்த ஆண்டு, பி.சி.,
பிரிவிற்கு, 197 மதிப்பெண்ணுக்கு,
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்
கிடைத்தது. இந்த ஆண்டு, 198.25க்கு இடம்
கிடைக்க வாய்ப்புள்ளது. பி.சி.,
பிரிவு மாணவர்கள், 'ஓவர் ஆல் ரேங்க்',
1,800க்கு கீழ் இருந்தால், அரசு மருத்துவக்
கல்லூரியில், இடம் கிடைக்க
வாய்ப்புண்டு. கடந்த ஆண்டு, 'கட் ஆப்'
மதிப்பெண், 197 வாங்கியவர்கள்,
தரவரிசை பட்டி யலில்,
1,885வது இடத்தைப் பெற்றனர்.
நடப்பாண்டில், இந்த மதிப்பெண்
பெறுவோர்,
3,374வது இடத்திற்கு தள்ளப்படுவர்.
அதேபோல், 196, 'கட் ஆப்'
வாங்கியுள்ளவர்கள், தரவரிசை பட்டியல்,
2,952ல் இருந்து,
4,668வது இடத்திற்கு தள்ளப்படுவர். கடந்த
ஆண்டு, 'கட் ஆப்', 195 மதிப்பெண் வாங்கி,
பட்டியலில், 4,179வது இடத்தில்
இருந்தவர்கள், தற்போது,
6,005க்கு தள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டில்,
மருத்துவப் படிப்பிற்கான, 'கட் ஆப்'
மதிப்பெண் அதிகரித்த தன்
எதிரொலியாக, வேளாண்மை,
கால்நடை படிப்புகள், 'கட் ஆப்' மதிப்பெண்,
2 - 3 உயர வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த
ஆண்டு, மருத்துவம் படிக்க விரும்பும்,
பிளஸ் 2 மாணவர்கள், இப்போதிருந்தே,
கவனமாக படிக்க வேண்டும். இவ்வாறு,
அவர் கூறினார்.

No comments:

Post a Comment