Sunday, June 15, 2014

பள்ளி, நூலகக்கட்டடங்கள் திறப்பு

தமிழகத்தில், 35.30 கோடி ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட, பள்ளி மற்றும் நூலக கட்டடங்களை, முதல்வர் ஜெயலலிதா,
திறந்து வைத்தார்.

அத்துடன், 5.50 கோடி ரூபாய்
மதிப்பில் கட்டப்பட உள்ள
கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2.18
கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 24
வகுப்பறைகளை, முதல்வர் ஜெயலலிதா,
வீடியோ கான்பரன்ஸ் மூலம்,
திறந்து வைத்தார். நபார்டு வங்கி கடன்
உதவியுடன், கன்னியாகுமரி,
சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி,
தருமபுரி, கடலூர், நாமக்கல்,
ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 21
பள்ளிகளில், 22.79 கோடி ரூபாயில்
கட்டப்பட்ட, பள்ளி கட்டடங்களையும்,
திறந்து வைத்தார். சேலம், தருமபுரி,
கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில்,
3.49 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 10
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்கள்;
ஒண்டிப்புதூர் மற்றும் அவினாசியில்,
73 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட,
உண்டு உறைவிடப்பள்ளி கட்டடம்;
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 40
பள்ளிகளில், 4.05 கோடி ரூபாயில்
கட்டப்பட்ட, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;
ஐந்து மாவட்டங்களில், 2.06
கோடி ரூபாயில் கட்டப்பட்ட நூலகம்,
ஆகியவற்றை, முதல்வர்
திறந்து வைத்தார். அலுவல்
பணி நிமித்தம், சென்னை வரும்
ஆசிரியர்கள், குறைந்த செலவில் தங்க,
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள,
ஆசிரியர் இல்லத் தில், 2.50
கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள,
கூடுதல் அறைகள்; திருச்சியில் 3
கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள,
ஆசிரியர் இல்ல கட்டடம் ஆகியவற்றுக்கு,
முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் வீரமணி,
தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத்
மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment