''பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின்
மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,''
என, தேர்வுத்துறை இயக்குனர்,மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,''
தேவராஜன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும்
மறுகூட்டல் முடிவு, stutent.hse14trv.in என்ற
இணையதளத்தில், 15ம் தேதி (இன்று),
காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும்.
மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின்
பதிவு எண்கள் பட்டியல், இணையதளத்தில்
வெளியிடப்படும். பட்டியலில்
இடம்பெறாத பதிவு எண்களுக்கான
விடைத்தாளில், மதிப்பெண் மாற்றம்
எதுவும் இல்லை என,
தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண்
மாற்றம் உள்ள மாணவர்கள், நாளை, 16ம்
தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,
பழைய மதிப்பெண்
சான்றிதழை ஒப்படைத்து, புதிய
மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்
கொள்ளலாம். இவ்வாறு, தேவராஜன்
தெரிவித்து உள்ளார். மறுகூட்டலுக்கு,
4,726 பேர் விண்ணப்பித்ததில், 456
பேருக்கு, மதிப்பெண்ணில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. 4,467 பேர்,
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில்,
2,796 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், 3,252
மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது. இது, 0.05 சதவீதம்.
No comments:
Post a Comment