Monday, June 02, 2014

சுய நிதி கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி கட்டணம்

சுயநிதி கல்வி நிறுவனங்களில் படிக்கும் பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணங்களை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நேற்று வெளியிட்ட உத்தர வில் கூறப்பட்டுள்ளதாவது: சுயநிதி கல்வி நிறுவனங்களில் அனைத்துவிதமான படிப்புகளிலும் இலவச மற்றும் கட்டணம் செலுத்தி படிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவ, மாணவியர் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், கட்டணக் குழு நிர்ணயித்த தொகையை மத்திய அரசின், உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்க அரசு உத்தரவிட்டது.
கடந்த 2012-2013ம் ஆண்டு முதல் மாநில அரசின், பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மதம் மாறிய கிறிஸ்தவ எஸ்சி மாணவர்களுக்கும், மேற்கண்ட திட்டத்தை விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு களை செயல்படுத்து வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது.
*சுயநிதி தொழில் படிப்பு கல்லூரிகளில், அரசு அங்கீகரித்த படிப்புகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணங்கள் வழங்கப்படும்.
* சுயநிதி கலை அறிவியல், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதி கல்லூரிகளில் படிப்போருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வழங்கப்படும்.
* இனிவரும் கல்வி ஆண்டுகளில் கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்டவைக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் வழங்கப்படும்.
* ஆதிதிராவிட நல ஆணையர், ஒவ்வொரு கல்வி ஆண்டும் இந்த திட்டத்துக்கு தேவையான முழு தொகையையும் ஆண்டின் தொடக்கத்திலேயே தொடர்புடைய இயக்ககத்துக்கு பிரித்து வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* மேற்கண்ட பிரிவு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் அந்த மாணவர்களிடம் இருந்து எந்தவித  கல்வி கட்டணங்களையும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் வசூலிக்க கூடாது என்பதை சம்மந்தப்பட்ட கல்வி நிலைய இயக்ககங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி கட்டணங்களை பெறும் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது

No comments:

Post a Comment