Monday, June 02, 2014

பி.ஆர்க். படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பி.ஆர்க். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை தபால் மூலமும் பெறலாம். www.annauniv.edutnea2014 என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனிலும் பதிவு செய்யலாம்.
புதுதில்லி கட்டடவியல் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் "தேசிய கட்டடவியல் நுண்ணறித் தேர்வு 2014'-இல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.  இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிய அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது 44 - 22358265, 22358266, 22358267, 22358044, 22358045 தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment