Monday, June 16, 2014

கவுன்சிலிங்கில் மாணவியருக்கு முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை முடிவு

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்
வழங்கும் 'நடமாடும் ஆலோசனை மைய'
சேவையில், பெண்கள் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

குடும்ப சூழ்நிலை உட்பட
பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட
பள்ளி மாணவ, மாணவியரின்
மனநிலையை கவுன்சிலிங் வாயிலாக
பக்குவப்படுத்த, நடமாடும்
ஆலோசனை மையம் துவங்கப்பட்டது.
மாணவர்களின் மனநிலையை ஒரு நாளில்
மாற்றுவது சாத்தியமில்லை என்ற
போதிலும், மாறுதல் ஏற்படுவதற்கான
வழிமுறைகளை மாணவர்களுக்கு
எடுத்துரைப்பதில், இம்மையம் சிறப்பாக
செயல்பட்டு வந்தது. தொண்ணுாறு சதவீத
பள்ளிகளில், சிறந்த பலன் கிடைத்தது.
தற்போது பெண் குழந்தைகளின் மீதான
வன்முறை நிகழ்வுகள்
அதிகரித்து வருவதால், பெண் குழந்தைகள்
அதிகம் படிக்கும்
பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கி,
அப்பள்ளி மாணவியருக்கு ஆலோசனை
வழங்க, கல்வித்துறை சார்பில் தீவிர
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை மண்டல உளவியல்
நிபுணர் அருள்வடிவு கூறியதாவது:
மாணவர்களை நன்னெறிப்படுத்தும்
நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இம்மையம்,
தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிராக
நடக்கும் வெறி செயல்களை தடுக்கும்
நோக்கில் இறங்கியுள்ளது. 9 முதல் 12
வகுப்பு மாணவியருக்கு மட்டுமே
ஆலோசனை வழங்க முடியும். எனினும்,
ஆலோசனை அளிக்கப்படும் மாணவியர்,
தங்களின் பள்ளியில்
அல்லது சுற்றுப்பகுதியில் இருக்கும் பிற
பெண் குழந்தைகளுக்கு அந்த
ஆலோசனைகளை வழங்க வேண்டும் என
அறிவுறுத்தப்படுகிறது. மண்டல அளவில்
பெண் குழந்தைகள் அதிகம் படிக்கும்
பள்ளிகள், பெண்கள்
பள்ளி ஆகியவற்றை முதன்மைபடுத்தி
ஆலோசனை வழங்க இருக்கிறோம்.
சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும்
வன்கொடுமைகள்,
பெண்களை பாதுகாப்பதில்
ஆண்களுக்கு உள்ள முக்கிய பங்கு,
சமுதாயத்தில் பெண்களை எவ்வாறு நடத்த
வேண்டும் என்பது குறித்து,
தற்போது பள்ளி மாணவர்களுக்கு
ஆலோசனை வழங்கப்படுகிறது. இவ்வாறு,
அருள்வடிவு கூறினார்.

No comments:

Post a Comment