அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பொது கவுன்சிலிங் 27–ந்தேதி தொடங்குகிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 23 மற்றும் 24–ந்தேதியும், 25–ந்தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
என்ஜினீயிரிங் கல்லூரியில் சேர ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 687 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5264 மனுக்கள் தகுதியில்லாதது என கருதி நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 68,423 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
முதல் தலைமுறை பட்டதாரிகள் 90,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கல்வி கலந்தாய்வு ஜூலை 9–ந்தேதி தொடங்கி 18–ந்தேதி வரை நடக்கிறது.
மாணவர்கள் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத் தில் இன்று காலை நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தர வரிசை பட்டியலை வெளியிட்டார்.
அவர் கூறும்போது, ‘‘பொறியியல் படிப்பில் 4 பாடங்களில் 200க்கு 200 கட்–ஆப் மார்க் 271 பேர் எடுத்துள்ளனர். இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.
ரேங்க் பட்டியலில் 200–க்கு 200 கட்–ஆப் மார்க் எடுத்து சென்னை மாணவர் சுந்தர் நடேஷ் முதலிடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. சுந்தர்நடேஷ்– மாம்பலம், சென்னை.
2. அபிஷேக்–சென்னை
3. விஜயராம்–ஈரோடு
4. மிதுன்–நாமக்கல்
5. சுந்தர்–திண்டுக்கல்
6. பிரபு–திருப்பூர்
7. ரவிசங்கர்–கோவை.
8. விஷ்ணுப்பிரியா
9. கே.ஆர்.மைதிலி –வாணியம்பாடி.
தொழிற்கல்வியில் முதலிடம் பிடித்த 10 மாணவர்களின் பெயர்கள்.
1. கே.ஆனந்த்– சேலம்.
2. மெல்பா– கோவை
3. சங்கர்பிரபு– கோவை
4. அன்புவிக்னேஷ்
5. அசாருதீன் பாஷா–
6. விக்னேஷ்– ஈரோடு
7. இவானிக்கிலா–
8. சுருதி– காரமடை
9. ஸ்ரீதர் – ஈரோடு
10. இலக்கியா – ஈரோடு.
இன வாரிய அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவில் கீர்த்தனாவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முகமது கிசாவும் அருந்ததியினர் பிரிவில் மாணவி மதுஷாவும், பழங்குடியினர் வகுப்பில் தென்னரசும் 200–க்கு 200 கட்–ஆப் பெற்றுள்ளனர்.
பின்னர் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
பொது கவுன்சிலிங் வருகிற 27–ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 28 வரை 32 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கலந்தாய்விற்கு 3,500 மாணவர்களும், மறுநாள் 5 ஆயிரம் பேரும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ – மாணவிகள், பெற்றோர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் இடங்கள் கிடைக்கும். பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்தவுடன் துணை கவுன்சிலிங் நடக்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராமன், உயர்கல்வி செயலாளர் ஷேமத்குமார் சின்கா, இணை செயலாளர் உமாமகேஸ்வரி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment