Saturday, November 29, 2014

தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்

வடமாநில பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததின கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த தினம் 2015ஆம் ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.பி தருண் விஜய்யின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி :அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி

"முழு சுகாதார தமிழகம்" அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

10th Maths Question Paper

மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் கட்டுக்குள்,
மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில்
இயங்கும் தனியார் பள்ளிகள், வரும்
கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய
பாடமாக நடத்த வேண்டும்

12th Computer Science Study Material

12th Maths Question Paper

Friday, November 28, 2014

PG-TRB Maths Study Material

2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள
இணை இயக்குனர்களுக்கு பணியிட
மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

பட்டதாரி மற்றும்
மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின்
உயர்கல்வி படிப்பதற்கான
அனுமதியை

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான
வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20
சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக
உயர்த்தி மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று 28.11.2014
வெள்ளிக்கிழமை நாகை,புதுக்கோட்டை,
திருவாரூர், தஞ்சாவூர் மற்றும்
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவித்து மாவட்ட
ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Monday, November 24, 2014

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில்,
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு,
சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி
அளிக்க தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழிக் கல்வி மூலமாகவோ / பகுதி நேரமாகவோ / மாலை நேர வகுப்பு மூலமாகவோ பயின்றிட சார்ந்த உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கிட இயக்குனர் உத்தரவு

Saturday, November 22, 2014

பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04. 2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும்
லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது.

பகுதிநேர ஆசிரியர் சம்பளம் இனி மாதம் ரூ.7000: அரசு உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கான
சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து,
7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க,
அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி. இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக
திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும்
இடை நிலைக் கல்வி திட்ட
இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் கல்வித்துறை திடீர் ஆய்வு

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, அரசு உதவி பெறும்
மேல்நிலைப்பள்ளிகளில்,
கல்வித்துறை அதிகாரிகள் திடீர்
ஆய்வு நடத்தினர்.

முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்!

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர
ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம்,
2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக,
அரசாணை வெளியிடப்பட்டுள்ள
நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே
முழுநேர கலை ஆசிரியர்கள்
நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர
ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை
அளித்துள்ளது.

2015 ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள்

டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்!

Tuesday, November 18, 2014

அரசுப் பள்ளியில் அற்புத சிற்பியாக உடற்கல்வி ஆசிரியை!

அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறவரின் கடமை என்ன?

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்

பல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர்.

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு
செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல்
மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-
மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி
கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள்
தேவைப்படுகிறார்கள்.

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால்
அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல்
குறைந்து வருகிறது.

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50
நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப்
பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த
வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Monday, November 17, 2014

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்
கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை .

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25
சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு
ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805
பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்

அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது

Friday, November 14, 2014

பள்ளிகளில் ஏற்கனவே இருக்கு அகராதி; மீண்டும் வழங்கப்படும் மர்மம் என்ன: புரியாத புதிராய் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி

இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,)
பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு மொழி அகராதிகள் வருகையால் தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Thursday, November 13, 2014

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்
அதிகாரிகளை இடமாற்றம்
செய்து அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர்
மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக
அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார்.
மேலும்
கோவை மாநகராட்சி கமிஷனராக
இருந்து வந்த கணேஷ்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக
நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல்
கழக நிர்வாக இயக்குனராகக
மைதிலி கே.ராஜேந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
உறுப்பினர் செயலராக சாம்புவேல்
கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மின் நிதிநிறுவனம்
கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான்
இயக்குனராக
ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிடி வடிவில் பாடத்திட்டம்!

பள்ளி பொதுத்தேர்வுகளில்
மாணவர்களின்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்
நோக்கத்துடன், சிடி வடிவில்
பாடத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
வீரமணி மற்றும் முதன்மை செயலர்
சபிதா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
நடந்தது. இதில், மாணவர்களின்
சேர்க்கை விபரம், கற்பிக்கும் முறை,
ஆங்கில வழிக்கல்வி, தேர்ச்சி விகிதம்,
காலி பணியிடங்கள் உள்ளிட்ட
பல்வேறு தகவல்கள்
குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
வீரமணி பேசியதாவது:
மூன்று ஆண்டுகளில், 64 ஆயிரம்
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1000
புதிய பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு, 5 சதவீதம்
தேர்ச்சி அதிகரித்துள்ளது.
மாணவர்களின்
கல்வித்தரத்தை மேம்படுத்த,
சிடி வடிவில் பாடத்திட்டம்
அறிமுகப்படுத்தப்படுகிறது. பிற
துறைகளில் இல்லாத வகையில்,
பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக
சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு, அமைச்சர் வீரமணி பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்
சபிதா பேசுகையில், "அனிமேஷன்
முறையில் பாடத்திட்டங்கள்
சிடி வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பாடங்களை எளிதாக
புரிந்து படிக்க இயலும். இந்த
புதியநடைமுறையை,
கையாள்வது குறித்த சிறப்பு பயிற்சி,
ஆசிரியர்களுக்கு பாடவாரியாக
வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள்
அடங்கிய சிடி தொகுப்பு,
ஒரு வாரத்தில்
அனைத்து பள்ளிகளுக்கும்
வழங்கப்படும்" என்றார்.
இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர்,
நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த
முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட
கல்வி அதிகாரிகள்,
பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர்
பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர்கள் நடுக்கம்:
ஆய்வு கூட்டத்தில், ஊட்டி, திருப்பூர்
மாவட்டங்களில் 70
சதவீதத்திற்கு குறைவாகவும்,
கோவை மாவட்டத்தில் 85
சதவீதத்திற்கு குறைவாகவும்
தேர்ச்சி பெற்ற
பள்ளி தலைமையாசிரியர்களிடம்
தனித்தனியாக
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்
சபிதா காரணங்களை கேட்டறிந்தார்.
முதன்மை செயலரின்
கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல்,
தலைமையாசிரியர்கள் சிலர்
நடுக்கத்துடன் தலைகுனிந்து நின்றனர்.
வரும் தேர்வுகளில் குறைந்த
தேர்ச்சி சதவீதம் பெறும்
பள்ளி தலைமையாசிரியர்கள் மீது,
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தலைமையாசிரியர்கள் மத்தியில்
இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 22 ஆயிரம் பேர் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 22 ஆயிரம்
பேர், ஆன்-லைன் மூலம்
தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல்
தவிப்பதாக வாசகி ஒருவர், ‘தி இந்து’
உங்கள் குரல் பதிவில்
தெரிவித்திருந்தார். அவரின்
நியாயமான வருத்தத்தை ஆசிரியர்
தேர்வாணைய (டிஆர்பி) அலுவலர்கள்
நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும்
என்று தேர்ச்சி பெற்றவர்களில் பலர்
தங்களின் ஆதங்கத்தை கூறியுள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர்
தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்
பெற்றால் தேர்ச்சி என
அறிவிக்கப்பட்டதனால்,
இடைநிலை ஆசிரியருக்கான தகுதித்
தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர். இவர்கள்
தேர்ச்சி பெற்றதற்கான
சான்றிதழை ஆன்-லைன் மூலமாக
பதிவிறக்கம் செய்து கொள்ளும்
வசதியை டிஆர்பி செய்திருந்தது. இதன்
அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம்
முதல் வாரத்தில் தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள்
ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சிக்கான
சான்றிதழை பதிவிறக்கம்
செய்து கொள்ள முடியும் என
டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை அறிந்த 50 ஆயிரம் பேர்
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான
சான்றிதழை ஆன்-லைன் மூலமாக
பதிவிறக்கம் செய்து கொண்டனர். 22
ஆயிரம் பேர் தகுதித் தேர்வில்
வெற்றி பெற்றதற்கான
சான்றிதழை பதிவிறக்கம்
செய்யவில்லை.டிஆர்பி அறிவிப்பு
வெளி யிட்டதை அறியாத நிலையில்,
பலர் குறிப்பிட்ட காலக்கெடுவான
ஐந்து நாட்களுக்குள்
தேர்ச்சி பெற்றதற்கான
சான்றிதழை ஆன்-லைனில்
இருந்து பதவிறக்கம் செய்யவில்லை.
தகவல் அறிந்து சான்றிதழ் பதிவிறக்கம்
செய்ய முயற்சி செய்தபோது, டைம்-
அவுட் என வந்ததால், அவர்களால்
தேர்ச்சி சான்றிதழை பெற முடியாத
சூழல் ஏற்பட்டுள்ளது.சான்றிதழ் பெறாத
சிலர்
இது குறித்து டிஆர்பி அளித்துள்ள
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கேட்டபோது,
ஒரு வாரத்தில் மீண்டும்
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்
வெளியிடப்படும்
என்று கூறி யுள்ளனர், ஆனால்,
இரண்டு மாதம் கடந்தும், அதற்கான
எவ்வித நடவடிக்கையும் எடுக்க
வில்லை எனத் தெரிய வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்று, சான்றிதழ்
பெறாதவர்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக
நாளை பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில்
திட்டமிட்டபடி குழந்தைகள் தின
விழா நடைபெறும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் ஆசிரியர் பணி நியமனம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்
மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6
வாரத்திற்குள் பதிலளிக்க
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு

ஆறு ஆண்டுகளாக
பணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள்
தவித்து வருகின்றனர்.

PGTRB ALL SUBJECTS SYLLABUS RELEASED BY TRB

கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக
பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம்
பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர், சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட
பள்ளிகளுக்கு கனமழை காரணமாக
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் தகவல்

Wednesday, November 12, 2014

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க
இன்று (புதன்கிழமை) கடைசி நாள்.
இதுவரை 10 லட்சத்துக்கும்
மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப
மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன்
போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி
நடைபெறுகிறது.

ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்

தமிழக அரசு சுமார் 10,000 காலிப்
பணியிடங்களுக்கு நடத்திய
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில்
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
நெறிமுறைகள் மற்றும்
கல்விக்கான உரிமை சட்டத்தின்
பிரிவுகள் மீறப்பட்டுள்ளன

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் ! : பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tuesday, November 11, 2014

Education Minister of Tamilnadu Review @ Coimbatore

அனிமேஷன் முறையில் பாடங்கள் தயாரிப்பு திட்டத்துக்கு ரூ .1 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

பத்தாம் வகுப்புக்கான கணக்குப்
பாடக்கூறுகள் ‘அனிமேஷன்களாக’
உருவாக்கி வகுப்பறையில் நடத்தப்பட
உள்ளது.

பள்ளிகளில் கழிப்பறை வசதி கல்வித்துறை இயக்குனர் அதிரடி

கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித்துறை இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்

அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம்,
களத்தூர் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்
திரு.குருமூர்த்தி அவர்கள்,

ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஆசிரியர் நியமன தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’
முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப
நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது.

10, 12ம் வகுப்பு பாடங்களை டிச. 7க்குள் முடிக்க உத்தரவு

பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான
மொத்த பாடத்திட்டங்களையும் டிச.7க்குள்
முடிக்குமாறு கல்வித்துறை
கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள்
திணறுகின்றனர்.

சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களுக்கு நவம்பர் 13- இல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப் பாட
ஆசிரியர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு வியாழக்கிழமை (நவ.13) நடைபெற உள்ளது.

Monday, November 10, 2014

கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை

பள்ளி மாணவர்களை கல்விச்
சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் 

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது!

அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத்தேர்வு செய்யும் நோக்கில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கான மாதிரி வினாப்
புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வுக்கான விண்ணப்பங்கள்
திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

மாணவர்களின் சேர்க்கை கட்டணம் எவ்வளவு? பள்ளிகளில் விபரம் சேகரிப்பு

அரசு உத்தரவின் படி, கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள,
மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம்
எப்போது வழங்கப்படும்

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில துணைப் பாடப் புத்தகம்

சமச்சீர் கல்வியின் கீழ் 6 முதல் 10-ஆம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகம் வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தொடர்அங்கீகாரம் தாமதம்: 2 ஆயிரம் பள்ளிகள் தவிப்பு"

தமிழகத்தில் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தும் தாமதமாகி வருவதால் 2 ஆயிரம் பள்ளிகள் தவித்து வருகின்றன என்றும்,

அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி!

அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர
ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

Sunday, November 09, 2014

அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும்
அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு,
முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் - புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க,
பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு,
பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல்
அளிக்கப்பட்டது.

Saturday, November 08, 2014

தொடக்கக் கல்வி : கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

துவக்கப்பள்ளி வசதி இல்லாத
குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய
பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறைக்கு தனி ' வெப்சைட்' விரைவில் ...! எளிமையாகிறது தகவல் பரிமாற்றம்

மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கு
என் தனி 'வெப்சைட்' விரைவில்
துவங்கப்படவுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜன., 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டி எழுத்துத் தேர்வு வரும் ஜன., 10ம்
தேதி நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது; 100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை!

“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத
வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க
கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக்
பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு2 லட்சம் விண்ணப்பம் தயார்!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக
உள்ள, 1,807 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, வரும், ஜன., 10ம்
தேதி போட்டித் தேர்வு நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு!

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்
தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும்
தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Thursday, November 06, 2014

விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் : 'நடவடிக்கை எடுக்கப்படும்' - இயக்குநர் ராமேஸ்வர முருகன்

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள்
கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது.

முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு

ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல்
அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்!

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணி நியமனம்
நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் வெளியிடவுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண்.9287/அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மற்றும் 2014-15)
போட்டி எழுத்து தேர்வு 10.01.2015
அன்று நடைபெறவுள்ளது.

Wednesday, November 05, 2014

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்ள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு!!!

தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட
அனைத்து விபரங்களையும்பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழுவின் தீர்மானங்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்': தேர்வுத் துறை

சமீபத்தில், பிளஸ் 2 உடனடித்தேர்வு நடந்தது. தேர்வு முடிவிற்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு,
விண்ணப்பித்த மாணவ,
மாணவியருக்கு,

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய
பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின்
போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான
அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்

Monday, November 03, 2014

அடுத்த ஆண்டில் புதிய கல்விக் கொள்கை: ஸ்மிருதி இரானி

அரசின் புதிய கல்விக் கொள்கை அடுத்த
ஆண்டு வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி ஞாயிற்றுக்கிழமை
தெரிவித்தார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு வினா– விடை புத்தகம்: 10– ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர் திரு.வி.சி.ராமேஸ்வர முருகன்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதிய முறையில் ஊக்க ஊதியம் !! பள்ளி கல்வி துறை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு
உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக்
கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் குழந்தைகளின் கல்வியில் முன்னேறுகிறது தமிழகம்

அனைத்துக் குழந்தைகளுக்கும்
கல்வி என்ற சாதனையை தமிழகம்
இன்னும் படைக்காமல் இருக்கலாம்;

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டம்

மாநிலம் முழுவதும் உள்ள
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Sunday, November 02, 2014

பள்ளி திறந்து 5 மாதமாகியும் இலவச பொருள் சப்ளை இல்லை: மாணவர்கள் கடும் அதிருப்தி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்
விலையில்லா பொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர மற்ற பொருட்கள் வழங்க
முடியவில்லை.

கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்!

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக்
கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள்
அதிகரித்து வருகின்றன.