ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம்
உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச
நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக
அரசின் எதிர் மனுவால்
அதிருப்தி அடைந்த,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்,
போராட்டம் நடத்த
முடிவெடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக முன்னாள் பொதுச்
செயலர் விஜயகுமார்,
முதுகலை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க ஊதிய
விகித முரண்பாடு குறித்து,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டிச.,
18ல், தமிழக பள்ளிக்கல்வித்துறை எதிர்
மனு தாக்கல் செய்தது. அதில், ’கடந்த
ஊதியக் குழுவில்,
முதுநிலை பட்டதாரி -
பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊதிய
குழு பரிந்துரைப்படி, மத்திய
அரசு ஊழியருக்கு இணையான
ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
கல்வித்துறையின், 1969 அரசாணையின்
படி, உயர்கல்வி ஊக்க ஊதியத்தால்
ஏற்பட்டுள்ள வேறுபாட்டை களைய
இயலாது’ என,
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை: ஒரே கல்வித் தகுதியில்,
ஒரே நாளில் பணியில் சேர்ந்த
பட்டதாரி ஆசிரியர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை
விட அதிகமாக ஊதியம் பெறும்
வேறு பாட்டை களைய,
வழக்கு தொடரப்பட்டது. ஆனால்,
கல்வித்துறை தாக்கல் செய்த,
எதிர்மனுவில் கூறப்பட்டுள்ள முரணான
கருத்துக்களை எதிர்த்து, நீதிமன்றம்
மூலம், தொடர் நடவடிக்கை எடுப்பது என
முடிவெடுத்து உள்ளோம். அதே நேரம்,
அரசின் எதிர்மனுவால்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களிடம்
ஏற்பட்டுள்ள, கடும்
அதிருப்தி யை வெளிப்படுத்த,
கிருஷ்ணகிரியில் நடக்கும்
பொதுக்குழுவில், அடுத்த கட்ட
போராட்டம்
குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம்
முதல் வாரத்தில் தொடங்குகிறது.
சென்னையில் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் தலைமையில் 10
பறக்கும் படையும், தென்சென்னை,
மத்திய சென்னை, கிழக்கு சென்னை,
வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர்
தலைமையில் 4 பறக்கும் படைகள்
அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர்
மற்றும் வருவாய் கோட்டாட்சியர்
தலைமையில் அமைக்கப்பட்டுள்ள
பறக்கும் படைகளும்
தேர்வு மையங்களை கண்காணிக்கும்
பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய
முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,
துறை அலுவலர்கள், வினாத்தாள்
கட்டுப்பாட்டாளர்கள்,
பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும்
அறை கண்காணிப்பாளர்கள் என சுமார்
2800 தலைமை ஆசிரியர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் இதர ஆசிரியர்கள்
தேர்வுப்பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள். பிளஸ் 2
தேர்வில் ஒழுங்கீன செயலில்
ஈடுபடுவோரை தடுக்க அரசுத்
தேர்வுகள் இயக்ககம் பல
அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இதன்படி, தேர்வு அறைக்குள்
துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ,
அச்சிடப்பட்ட
புத்தகத்தை வைத்திருந்தாலோ
ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத
தடை விதித்தும்,
துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற
மாணவர்களின்
விடைத்தாட்களை பார்த்து எழுதுதல்
போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும்
மாணவர்களை இரண்டு ஆண்டுகள்
தேர்வு எழுத தடை விதிக்கவும்
முடிவு செய்துள்ளது. ஹால்டிக்கெட்
மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில்
மாணவ மாணவியரின் போட்டோக்கள்
இடம் பெறுவதால் ஆள்மாறாட்டம் நடக்க
வாய்ப்பில்லை. அதனால் பிட்
அடிப்பது தொடர்பாக கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வுத்
துறை முடிவு செய்துள்ளது.
தேர்வு அறைக்குள்
அறை கண்காணிப்பாளர்,
தேர்வெழுதும் மாணவ, மாணவியர்
கண்டிப்பாக செல்போன்
வைத்துக்கொள்ள
தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி வைத்திருந்தால் துறை அலுவலர்
கள் அல்லது போலீசார்
அவற்றை பறிமுதல்
செய்து மேல்தொடர்
நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர
தடை
தேர்வுப்பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களிடம்
தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு
முடிந்து வெளியில்
செல்லும்போதோ முறைகேடான
செயல்களில் நடந்துகொள்ளும்
மாணவர்கள், மற்ற மாணவர்களின்
விடைத்தாட்களை வாங்கி எழுதுவது
போன்ற முறைகேடான செயல்களில்
ஈடுபடும் மாணவர்களுக்கு நிரந்தரமாக
தேர்வு எழுத முடியாத
நிலை ஏற்படும். மேலும் அந்த
மாணவர்கள் மீது காவல்துறை மூலம்
நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத்
துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத
வருகை பதிவு வைத்திருந்தால்,
அவர்களை, செய்முறை தேர்வில்
தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
வரும் பிப்ரவரி முதல் வாரத்தில்
செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள்
நடந்து வருகிறது.
மார்ச்சில்...
பிளஸ் 2 மற்றும் 10 ம்
வகுப்பு மாணவருக்கான, 2014 - 15ம்
கல்வியாண்டு பொதுத்தேர்வு, வரும்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.
பொதுத்தேர்வு மாணவருக்கான
செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்)
நடத்தப்படும். பிளஸ் 2 மாணவருக்கு,
இயற்பியல், வேதியியல், உயிரியல்,
தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர்
சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள்
உள்ளிட்டவைக்கு செய்முறை தேர்வு
நடத்தப்படும். வரும் பிப்ரவரி முதல்
வாரத்தில்,
செய்முறை தேர்வை நடத்துவதற்கான
ஏற்பாடுகளை,
தேர்வுத்துறை செய்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள 200
மதிப்பெண்ணில், 150 மதிப்பெண்
எழுத்து தேர்வாகவும், 50 மதிப்பெண்
செய்முறை தேர்வாகவும் இருக்கும்.
அதில், செய்முறை தேர்வில் மட்டும், 30
மதிப்பெண் புறமதிப்பீட்டுக்கும், 20
மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும்
பிரித்து, மொத்தம், 50 மதிப்பெண்கள்
வழங்கப்படும்.
அக மற்றும் புறமதிப்பீடு மதிப்பெண்
சேர்த்து, 50க்கு, 40 மதிப்பெண்
எடுத்தால்தான், செய்முறை தேர்வில்
தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும்.
அவ்வாறு, 40 மதிப்பெண்
செய்முறை தேர்வில் பெறாத மாணவர்,
செய்முறையில்
தேர்ச்சி அடையாதவராகவே
கருதப்படுவார். அவர் எழுத்துத்தேர்வில்,
150க்கு 150 மதிப்பெண் பெற்றாலும்,
சம்பந்தப்பட்ட பாடத்தில்
தேர்ச்சி அடையாதவராகவே
அறிவிக்கப்படுவார்.
அதனால்,
செய்முறை தேர்வு என்பது முக்கியம்.
மேலும் 150 மதிப்பெண்ணுக்கான
எழுத்துத் தேர்வில், 30 மதிப்பெண்
எடுத்தாலே, செய்முறை தேர்வில்
எடுத்த, குறைந்தபட்ச 40 மதிப்பெண்
சேர்ந்து, மொத்தம் 70 மதிப்பெண்ணாக
கணக்கிடப்பட்டு,
தேர்ச்சியடைந்து விடலாம்.
செய்முறை தேர்வில், பெரும்பாலும்
மாணவரின் நன்னடத்தை, வருகைப்
பதிவு,
செய்முறை தேர்வு ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டு, மதிப்பெண்
வழங்கப்படுகிறது.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார்
பள்ளி கள், செய்முறை தேர்வில்
முழு மதிப்பெண் வழங்கி, பள்ளியின்
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க
தேவையான
நடவடிக்கையை மேற்கொள்கின்றன.
இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள்,
வருகைப்பதிவு மற்றும்
ஓரளவு செய்முறை தேர்வை
எதிர்கொண்டாலே, அவரை, பாஸ்
(தேர்ச்சி) செய்துவைக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு மாதங்கள்...
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், 75
சதவீத வருகைப்பதிவை பூர்த்தி
செய்திருந்தால், செய்முறை தேர்வில்,
50க்கு, 40 மதிப்பெண் வழங்கி, பாஸ் மார்க்
போடப்படும். கடைசி இரண்டு மாதங்கள்,
முறையாக பள்ளிக்கு வந்து,
பயிற்சி தேர்வுகளை
எழுதியிருந்தாலும், மதிப்பெண்
வழங்கப்படும். இருந்தாலும்,
செய்முறைத்தேர்வில், மாணவர்
தனது பங்களிப்பை முறையாக
செய்திருக்க வேண்டும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர்
பயிற்சியால், தொடக்க பள்ளிகளில் கற்றல்,
கற்பித்தல் பணியில்
பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 2000-
த்தில் ஒன்று முதல் எட்டாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
கல்வி தரத்தினை மேம்படுத்த
தொடங்கப்பட்டது. செயல்வழி கற்றல் இதன்
மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு,
இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.
தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு
பள்ளி, மேலாண்மை குழு பயிற்சி,
ஆங்கில வாசிப்பு திறன்
மேம்பாட்டு பயிற்சி, அறிவியல்
செய்முறை பயிற்சி,
மாணவர்களை கையாளும் பயிற்சி உட்பட
பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த பயிற்சி முதல் பருவத்தில்
நடத்தப்படாமல், இரண்டாம் பருவ
கடைசி கால கட்டத்திலும், மூன்றாம்
பருவ கடைசி கால கட்டத்திலும்
நடத்தப்படுகிறது. இதனால், கற்றல்
கற்பித்தல் பணிகளில்
தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள்
புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம்
தேர்வு,அரையாண்டு
விடுமுறைக்குரிய மாதம். ஆனால்,
கடந்த 6-ம் தேதி, 13-ம் தேதியில்
பயிற்சி வழங்கப்பட்டது. இந்த மாதம் ஜன.3-
ம் தேதி குழந்தை உரிமைகள் குறித்த
பயிற்சி வழங்கப்பட்டது. வருகிற 5, 12, 19,27
ஆகிய தேதிகளில் பிரிட்டிஷ் கவுன்சில்
ஆங்கில பயிற்சி, 6-ம் தேதி அறிவியல்
பயிற்சி, 24-ம் தேதி குறுவளமைய கூட்ட
பயிற்சி நடக்கிறது. இந்த மாதம் 14 முதல்
17-ம் தேதி வரை பொங்கல்
விடுமுறையாகும். 26-ம்
தேதி குடியரசு தினமாகும்.
ஈராசிரியர் பள்ளியில் ஒரு ஆசிரியர்
பயிற்சிக்கு சென்றால், அடுத்த ஆசிரியர்
ஐந்து வகுப்புகளையும் கவனிக்க
வேண்டும். கற்றல்
பணியை முழுமையாக மேற்கொள்ள
இயலாது.தொடக்கபள்ளி ஆசிரியர்
ஒருவர் கூறும்போது: இந்த மாதம்
பொங்கல் லீவு, குடியரசு தின
லீவு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில்
இதை தவிர்க்கலாம். ஈராசியர் பள்ளியில்
உள்ள ஒரு ஆசிரியர்
பயிற்சிக்கு வருவதால் மற்ற
ஒரு ஆசிரியர்
அனைத்து வகுப்புகளையும் கவனிக்க
வேண்டும். இதனால்,
மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல்
பணிகளில் தொய்வு ஏற்படும். முதல்
பருவ கால கட்டமான ஜூன் மாதம் முதல்
செப்டம்பர் மாதத்துக்குள் இந்த
பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மூன்றாம் பருவம் குறுகிய காலம்
கொண்டது.
மாணவர்கள்
இறுதி தேர்வுக்கு தயாராவதால்,
அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர்
வழங்கும்
பயிற்சி மாணவர்களை முழுமையாக
சென்றடையாது. அனைவருக்கும்
கல்வி இயக்க நிதியை செலவழிக்க
வேண்டும் என்ற நோக்கில் திடீரென
பயிற்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
வருங்காலத்தில் இதனை தவிர்க்க
வேண்டும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் (எஸ்.எஸ்.ஏ.,),
2014-15ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித்
தரத்தை அளவிட, அடைவுத்தேர்வுகள் நடத்த
அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம்
மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல்
முறை குறித்து அளவீடு செய்வதற்கு அரசு, நகராட்சி,
நலத்துறை, உதவிபெறும் பள்ளிகளில் அடைவுத்தேர்வுகள்
நடத்தி வருகிறது.
இத்தேர்வின் முடிவுகளை கொண்டு, எதிர்வரும்
கல்வியாண்டுகளில் கற்பித்தல் முறையில் மாற்றங்கள்,
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள்
உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு விரைவில்
நடக்கவுள்ளது. அடைவுத்தேர்வுகள் மூன்று,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாரத்துக்கு, 10 பள்ளிகள்
வீதம் தேர்வுசெய்து இத்தேர்வுகள் நடக்கும்.
கோவை மாவட்டத்தில், 22 வட்டாரங்களில், 220 பள்ளிகள்,
அடைவுத்தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 660 கண்காணிப்பாளர்களும், மாநில ஆசிரியர்
பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், 22 பேர்
மேற்பார்வையாளர்களாக நியமிக்கும் பணிகள்
நடந்துவருகிறது. அடைவுத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம்,
கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய
பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகளின் முடிவுகள் மதிப்பீட்டு செய்யப்பட்டு,
பாடவாரியாக மாணவர்களின் தரம், வாசிப்பு திறன்,
அடிப்படை கணித கணக்கீடு உள்ளிட்ட அனைத்தும்
மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இத்தேர்வுகளுக்கு மாவட்டங்களில், செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள், கண்காணிப்பாளர்கள்,
தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் விபரம்,
கேள்வித்தாள் வடிவமைப்பு பணி குறித்து நாளை மாலைக்குள்
சமர்ப்பிக்க கூடுதல்
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர்
தகுதி தேர்வில்
பங்கு பெற்று தேர்ச்சி
பெற்றவர்களின் சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டு, தேர்வர்கள்
பதிவு இறக்கம் செய்ய
அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான
தேர்வர்கள் தங்கள்
சான்றிதழ்களை பதிவிறக்கம்
செய்து கொண்டனர். சரியான
முறையில் பதிவிறக்கம்
செய்யாதவர்களின் சான்றிதழ்கள்
தற்பொழுது Print out எடுக்கப்பட்டு,
தேர்வர்கள் தேர்வு எழுதிய
மாவட்டத்தின் அடிப்படையில்
தொடர்புடைய
அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்கள் மூலம்
வழங்கப்பட உள்ளது.
தேர்வர்களுக்கு சான்றிதழ்
வழங்கும் பணியானது 19.01.2015 முதல்
14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–
ந்தேதிக்கு முன்பாக மாணவர்
சேர்க்கை கூடாது என்றும்
அவ்வாறு மாணவர்களை சேர்த்தால்
பள்ளிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மெட்ரிகுலேசன்
பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன்
பள்ளிகள் இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
மெட்ரிகுலேசன் பள்ளிகள்
தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன்
பள்ளிகள், மெட்ரிகுலேசன்
உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான
பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும்
சுயநிதி பள்ளிகள் ஆகும்.
இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற
பள்ளிகள் அனைத்தும்
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில்
உள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குனராக
பிச்சை இருக்கிறார்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல
ஜனவரி மாதத்திலேயே அடுத்த
கல்வி ஆண்டுக்கான மாணவர்
சேர்க்கையை தொடங்கி விடுகிறது.
குறிப்பாக எல்.கே.ஜி.
மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி
விடுகிறது.
இது தொடர்பாக
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகம்
அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின்
ஆய்வர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்
கூறியிருப்பதாவது:–
ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக மாணவர்
சேர்க்கை கூடாது
தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன்
பள்ளிகளிலும்
இப்போது மாணவர்சேர்க்கை
நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4–
ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர்
சேர்க்கை நடைபெறவேண்டும்.
அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன்
பின்னர்தான் வழங்கவேண்டும்.
முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர்
சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும்
தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த
பள்ளியாவது மாணவர்
சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிகள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி,
தனியார் பள்ளிகள் ஏழைக்
குழந்தைகளுக்கு 25 சதவீத
இடங்களை ஒதுக்குவதைத் தீவிரமாகக்
கண்காணித்து செயல் படுத்த,
பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும்
மெட்ரிக்குலேஷன் கல்வித்
துறை இயக்குநர்களுக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும்
வசதியில்லாத குடும்பத் தினரின்
குழந்தைகள் படிக்க முடியாத சூழல்
உள்ளது.
தனியார் பள்ளிகளில் அளவுக்கு மீறிய
கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாததால்,
வசதியில்லா தவர்கள் கடன் வாங்கி, தங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளி களில்
படிக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்விக்
கூடங்களில் 25 சதவீத இடங்களை,
ஏழை மற்றும் வசதியில்லாத குடும்
பத்தைச் சேர்ந்த
குழந்தைகளுக்கு ஒதுக்க, மத்திய
அரசு கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தை கடந்த 2009ல் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் படி, தனியார்
பள்ளிக்கூடங்கள் 25 சதவீத இடங்
களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க
வேண்டும். அந்தக் குழந்தை களுக்கான
கல்விக்
கட்டணத்தை அரசே பள்ளிக்கூடங்களுக்கு
நேரடி யாக வழங்கும். இந்தச் சட்டம் கடந்த
ஆண்டுகளில் சரிவர
செயல்படுத்தப்படவில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், கட்டாய மற்றும் இலவசக்
கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ தீவிரமாக
செயல்படுத்த, தனியார்
பள்ளிக்கூடங்களுக்கு
அறிவுறுத்துமாறு, பள்ளிக்கல்வித்
துறை அதிகாரிகளுக்கு தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்
துறை முதன்மை செயலர்
சபிதா பிறப்பித்த உத்தரவில், ‘‘கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தை தனியார்
பள்ளிகள் தீவிரமாக செயல்படுத்
துவது குறித்து, பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகள்
கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இதற்காக பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர், தொடக்கக்
கல்வி இயக்குநர் மற்றும்
மெட்ரிக்கு லேஷன் பள்ளிகள் இயக்குநர்
ஆகியோருக்கு உரிய அதிகாரம்
அளிக்கப்படுகிறது. இவர்கள்
கண்காணிப்பு நடவடிக்கை
மேற்கொண்டு, கல்வி உரிமைச்
சட்டங்களை தனியார் பள்ளிகள் உரிய
முறையில்
செயல்படுத்துவது குறித்து,
அரசுக்கு அறிக்கை தர வேண்டும்’ என
கூறியுள்ளார்.