1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய
குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு
துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல
தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.குரூப்–1
மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது.
குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10
வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட இப்போது
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த
இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து
முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது எழுத்துதேர்வுடன்
நேர்முகத்தேர்வும் கொண்டது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வின்
மதிப்பெண்ணை வைத்து நியமிப்பது குரூப்–2 ஏ தேர்வு ஆகும். குரூப்–2
தேர்வுக்கு முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது.
பின்னர் மெயின்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக
காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000
காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக
பணியிடங்கள் சேகரிக்கப்படவில்லை.
அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான
அறிவிப்பு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000
பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம் ஆகுவதற்கு
காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில் இன்னும் 140 பேர்களுக்கு
நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன்
பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து
இந்த வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment