Sunday, August 31, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% உயருகிறது அகவிலைப்படி...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க விகிதம் 7.25 சதவீதம் உயர்ந்ததையடுத்து, அவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொடக்கநிலை & உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத நாட்காட்டி

# 05.09.2014-ஆசிரியர் தினம்.
# 06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்
# 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்களை திட்டவோ, அடிக்கவோ கூடாது : பள்ளிகள் இயக்குனரகம்

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோ, அடிக்கவோ கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

திருச்சியில் ஆசிரியர் கவுன்சலிங் துவக்கம்! முதல் நாளில் 24 பேருக்கு பணி ஆணை

தமிழக அரசின் உத்தரவை அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு, பணி நியமன கவுன்சலிங், திருச்சியில் நேற்று துவங்கியது.

'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

Saturday, August 30, 2014

மாவட்ட வாரியாக ஆசிரியர் பணிநாடுநர் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு, ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர்

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்!!

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆபத்து! : அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும்... : மவுனம் சாதிக்கும் கல்வித்துறை

ஈரோடு: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிந்தும், கல்வித்துறையினர் மவுனம் சாதித்து வருகின்றனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

விருதுநகர்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்

கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, 'சாப்ட்வேர்' பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

மலையூர் மலைக்கிராமத்தில் சாதனை மாணவர்கள்: பள்ளிக்கு செல்ல தினமும் 10 கி.மீ., நடை பயணம்

பாட்டன் காலத்தில் 'தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,' என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம்.

Friday, August 29, 2014

புதிய ஆசிரியர் நியமனம்: 32 மாவட்ட வாரியாக இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ள இடங்கள்

பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு - மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம்

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன்
படி

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு " எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன்
படி

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

Thursday, August 28, 2014

தமிழகத்தில் 1656 இடை நிலை ஆசிரியர்கள் பட்டியல் "ரீலிஸ்", 19 இடங்களுக்கு தகுதியானவர் இல்லை!

14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பபு

முதுகலை ஆசிரியர்களுக்கான நியமன
கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 31ம்
தேதி மாவட்டம் விட்டு மாவட்ட நியமன
கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் !

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம்
வகுப்பு வரை மாணவர்களின் கற்கும்
திறனை மேம்படுத்தும் விதமாக பாடப்
புத்தகங்கள் வீடியோவாக
தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ( ஆக.28) வழங்குகிறார்

தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649
இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.டி.இ., 'அட்மிஷன்' தராத 1,937 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'

'இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத,
1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல்
வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி,
விசாரணைக்குப் பின், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்
துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

2 மாதங்களுக்கு ஒருமுறைஆசிரியர் பணிபதிவேடு சரிபார்க்க தொடக்க கல்வித்துறை உத்தரவு.!!

ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை 2
மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து
உறுதி செய்யுமாறு தொடக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி!

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல்
நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம்: 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத்திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு டெட் தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள்!

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல்
ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியீடு

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும்
பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை

பிளஸ் 2 கணிதத்தில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' : ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல்களில் 4
பக்கங்கள் மாயமானதால், கூடுதல் மதிப்பெண் வழங்க அரசுத்தரப்பு ஒப்புக்கொண்டது.

4,500 குழந்தை தொழிலாளர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு

இந்தியாவில் பள்ளி செல்லும் வயதில்
கல்வி கற்காமல் வேலைக்கு செல்லும்
குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்க
துவங்கியது.

அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் பலவகை கலவை சாத திட்டம் விரைவில் துவக்க நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில்,
பலவகை கலவை சாதத்துடன்,
மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம்,
விரைவில் துவக்கப்பட உள்ளது.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்

பள்ளிக்கல்வித் துறையில், 12ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும்
விதமாக, முதல்வர் ஜெயலலிதா,
இன்று தலைமைச் செயலகத்தில், சில
பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

Wednesday, August 27, 2014

மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்

TET Paper 2 Additional Selection List For Tamil Subject

TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

Tuesday, August 26, 2014

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 27.08.2014 அன்று காலை 11மணிக்கு அந்தந்த மாவட்ட ADW அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு, தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.

594 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான கூடுதல் காலிப் பணியிடங்களுக்கான இரண்டாவது பட்டியல் சார்பான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு

Monday, August 25, 2014

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)

TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாமல் பள்ளி வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு திறன் தேர்வு நாளை நடத்தவும், தேர்வு சார்பான அறிவுரைகள் வழங்கி திட்ட இயக்குனர் உத்தரவு

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Sunday, August 24, 2014

கவுன்சலிங்கில் மறைக்கப்பட்ட இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாற்ற உத்தரவு

தமிழகத்தில் நடந்த கலந்தாய்வில்
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் இடங்கள் மறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான
ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா,
உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி,
பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012
முதல் பணியாற்றி வருகின்றனர்.

PG கணிதம் மற்றும் ஆங்கிலம் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு தாள் ஒன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணி நாடுகளுக்கான அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனம் 2012-13, அறிவிக்கை எண் 06/2014 நாள் 21.08.2014 க்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களில் பட்டியலில் இருந்து தாள் இரண்டில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.

தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 பேர் நியமனம்

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது.

மதிப்பெண் முறை வேண்டாம்; கிரேடு முறை வேண்டும்!

மதிப்பெண் முறை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. மாணவர்களிடையே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி

மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே.

ஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

Saturday, August 23, 2014

885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது

885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு

ஆசிரியை மீது தாக்குதல் நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குஆசிரியை மீது தாக்குதல் நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ராஜா மனைவி தாரணி (32). இவர் துவாக்குடி அடுத்த தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் உள்ள திருவள்ளுவர் குருகுல மானிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: ஆக.25 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை திங்கள்கிழமை (ஆக.25) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இளநிலை கல்வியியல் மற்றும் முதுகலை பட்டம் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்று தேர்ச்சி பெற்றால் - முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

செப்.,6,7ல் அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி

"பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு - தினமணி

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.

Friday, August 22, 2014

தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 3 மாதத்தில் குழு அமைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பெரியார்
பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக சங்கத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு

2582 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியீடு

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு; பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை,
பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்; 2582 காலிபணியிடங்களுக்கு 31,500 பேர் போட்டி

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2க்கான 2வது பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது!

இந்த தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷன் தாள் இரண்டுக்கான
இரண்டாவது பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு புது தெம்பையும் தெளிவையும் அளித்துள்ளது.

Wednesday, August 20, 2014

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல்

''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.

நடப்பாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனத்துக்கு சிக்கல்; தடை கோரி வழக்கு!

ஆசிரியர்களுக்கு நிபந்தனை, 90 சதவீத தேர்ச்சி பள்ளிக்கல்வி செயலர் கெடு!

Tuesday, August 19, 2014

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு - 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி அடைவு ஆய்வு தேர்வு

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு வரும் 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சிறந்த பள்ளிகளுக்கு பரிசு: தேர்வு செய்யும் பணி தீவிரம்

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரித்தல் மர்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான உத்தரவு

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள்

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு; பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பகுதி நேர ஆசிரியர்கள் காலியிடம் கணக்கெடுப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

Monday, August 18, 2014

பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன
கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் சொந்த செலவில் ஐ.டி. கார்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆ.குரும்பப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

Sunday, August 17, 2014

கட்டாய இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

கட்டாய இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுநர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லாசிரியர் விருது: தேர்வுமுறைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

இமத்திய, மாநில அரசுகள் வழங்கும்
நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யும்
முறைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வுப்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம்

தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்
மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம்
ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர்
தேர்வு வாரியம்), காலதாமதம்
செய்து வருகிறது.

அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு

அகஇ - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறும்

கரும்பலகை வாங்க பள்ளி மானியம்; ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க உத்தரவு

கரும்பலகை, உலக உருண்டை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பள்ளி மானியம் இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்

பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு

''அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்புவதில் குளறுபடி : 2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம்

முதல்பருவ பாடப்புத்தகங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவருக்கு முழுமையாக அனுப்புவதில் குளறுபடி நீடிக்கும் நிலையில், இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தை, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணியை, பாடநூல் கழகம் துவங்கியுள்ளது.

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு : பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாறுகிறது

தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன.

அரசு இன்ஜி., கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம்

அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன.

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரைத்த மாவை அரைக்கும் கல்வி துறை : கிராமப்புற பள்ளிகளை அமைச்சர் பார்வையிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கான நல திட்டங்கள், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்வது குறித்தும், பொது தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்தும், ஏற்கனவே பல முறை நடந்த ஆய்வு கூட்டங்களில், அமைச்சர் மற்றும் செயலர் விவாதித்த பிறகும், தற்போது, 'மண்டல ஆய்வு கூட்டம்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி தலைமையில், அதிகாரிகள் படை, மாநிலம் முழுவதும், ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம்

தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மா.க.ஆ.ப.நி - கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி பணிமனை 21.08.2014 முதல் 23.08.2014 வரை சென்னையில் நடைபெறவுள்ளது

Saturday, August 16, 2014

தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்" நீதிபதி அறிவிப்பு !

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள்
தொடர்ந்த வழக்கில்

ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!

உரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறையில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் வசூல் வேட்டை! கண்ணீர் விடும் ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி எப்போது?

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள்,
தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?

12th Latest Chemistry Study Material Collection

தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது: சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்

தமிழகம் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது

ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அனைத்து சத்துணவு, அங்கன்வாடி மையங்களிலும் கலவை சாதத்துடன் மசாலா முட்டை வழங்கப்படும் சுதந்திர தின விழாவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அனைத்து சத்துணவு மையம்,அங்கன்வாடி மையங்களுக்கும் பலவகை கலவை சாதம்,
மசாலா சேர்த்த முட்டை உணவு வகைகள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய
திட்டம் சிறப்பு வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேட்டி

டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பார்வையற்ற மாணவர்கள் ஆக., 18க்குள் விண்ணப்பிக்கலாம்; பள்ளி கல்வி இயக்குனர்

"இடைநிலை கல்வித் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் முற்றிலும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, தேசிய பார்வையற்றோர் மண்டல மையம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

Thursday, August 14, 2014

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு திருத்திய ஊதியம் வழங்குதல் சார்பான அரசின் தெளிவுரை

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS PUBLISHED

Click here to know the Result

http://alleducationnewsonline.blogspot.in/2014/08/tnpsc-departmental-examinations-may.html?m=1

பள்ளி பராமரிப்பு மானியம் -செலவிட வழிகாட்டு நெறிமுறைகள்

ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ்
உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு டிஆர்பி செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்
தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், டி.ஆர்.பி உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, August 13, 2014

அடுத்த ஆண்டு நடக்கும் பள்ளி பொது தேர்வு : 20 லட்சம் மாணவர் எழுதுவர் என எதிர்பார்ப்பு

அடுத்த ஆண்டு, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை எழுத உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம் குறித்த கணக்கெடுப்பு பணியை, அடுத்த மாதம் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்!

ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக
அரசை வலியுறுத்துகின்றனர்.

தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விவரம் மற்றும் புதிய பணியிடங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதன் விவரம் தெரிவிக்க இயக்குனர் உத்தரவு

DGE - SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER / OCTOBER 2014 TIME TABLE

பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது

பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும்
உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு
அறிக்கையை அனுப்பி உள்ளார்.

ஐகோர்ட் அதிரடி உத்தரவு தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் பொறுப்பு அல்ல

திருநெல்வேலி அருகே கொங்கநாதன் பாறையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பாலிடெக்னிக் கல்லூரியில்

தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்

தமிழகத்தில் 17 ஆயிரம்
தொடக்கப்பள்ளிகளில் 2
ஆசிரியர்களே பணியாற்றுவதாக
அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு சிறப்பு மையங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி

தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை,
மேனிலைப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த ஆய்வு 3 இயக்குநர், 12 இணை இயக்குநர்கள் தலைமையில் இன்று தொடங்குகிறது.

Tuesday, August 12, 2014

கிராம சபா கூட்டம் 15.08.2014 அன்று நடைபெறுதல், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

வருடத்திற்கு 500 ஆசிரியர் பயிற்றுனர்களை மட்டுமே பள்ளிகளுக்கு மாற்ற இயலும்; பள்ளிக்கல்வி இயக்குனர்

பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியது:பள்ளிக்கல்வித்துறை

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பழங்குடியினப் பிரிவில் அதிக காலியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில்
பழங்குடியினப் பிரிவில் 45 சதவீதத்துக்கும்
அதிகமான காலியிடங்கள் உள்ளன.

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்; நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப்பட
உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு.

பள்ளி, பஸ் வசதி இல்லாத மாணவர்களுக்கு போக்குவரத்து நிதி

தமிழகத்தில் பள்ளி, பஸ் வசதி இல்லாத 813 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 11,002 மாணவர்கள் உள்ளனர்.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

Monday, August 11, 2014

அரசுப் பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

புதிய டி.இ.ஓ.,க்களுக்கு நிர்வாக பயிற்சி

டி.இ.ஓ., பதவி உயர்வு பரிந்துரை பட்டியலில் உள்ள அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 46 பேருக்கு, சென்னையில் நாளை முதல், நிர்வாக
பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

"குழந்தைகள் பாதுகாப்பு: பாடத் திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை"

குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு குறித்து பாடத் திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால்சிங் கூறினார்.

இலவசங்கள் வேண்டாம், பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டுங்கள் : ராமதாஸ் வேண்டுகோள்

மக்களுக்கு இலவசங்கள் அளிக்க வேண்டாம், பதிலாக பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிப்பறைகளை கட்டிக் கொடுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிக்கல்வி :பட்டதாரி ஆசிரியர்கள் பாட வாரியாகத் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

ஏ.இ.இ.ஓ., அலுவலக உதவியாளர்களாக ஆசிரியர்கள், கேள்விக்குறியாகும் மாணவர் கல்வி!

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13)
தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.

முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு; இம்மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை - தினமலர் செய்தி

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)
நேற்று வெளியிட்டது.

இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு
செய்துள்ளது.

Sunday, August 10, 2014

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு ( NMMS ) டிசம்பர் -2013 - வெற்றி பெற்று படிப்பு உதவித்தொகை பெற தகுதி வாய்ந்த மாணவ/ மாணவியர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு அனைத்து மாணவர்களுக்கும் SBI வங்கிக்கணக்கு விரைவில் துவங்க அறிவுரை

'ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றால் பள்ளி இடைநிற்றல் இருக்காது'

ஒவ்வொரு ஆண்டும் கோடையில்
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து,
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
கணக்கெடுப்பு நடத்துகிறது.

தலைமை ஆசிரியையை செயல்படவிடாமல் தடுத்த ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்
தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக
செயல்படவிடாமல்,

போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணிநீக்கம்

உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக
அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்
ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக,
கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

தொடக்கக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

Click here
www.trb.tn.nic.in

Saturday, August 09, 2014

மாணவர் மன்றங்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்: "தினமணி'

கல்லூரி மாணவர் மன்ற உறுப்பினர்கள், தங்களிடையே உள்ள ஒற்றுமையை சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியுமேயானால், தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.

பி.எட்.: இரு ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டமா? அமைச்சர் விளக்கம்

பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

IGNOU MEd & BEd Entrance Test Old Question Papers

We will give IGNOU MEd Entrance Test Question Papers & IGNOU BEd Entrance Test Previous year Question Papers for your reference.Click Here to Dowload

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை

 தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவர்களை கவர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி : மூடப்படும் நிலையிலிருந்து தரம் உயர்த்தும் அளவுக்கு முன்னேற்றிய தலைமை ஆசிரியை

கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையிலேயே செயல்பட்டு வந்தது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஜெயிக்க வைக்கும் தாசில்தார்

‘இவரது சேவை எமக்குத் தேவை’ மதுரை தாசில்தார் பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் இப்படி பாராட்டுக் கடிதம் கொடுத் திருக்கிறார்கள். தாசில்தாரை பாராட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் இப்படிக் கடிதம் கொடுக்கக் காரணம்தான் என்ன?

பள்ளியில் மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் "சஸ்பெண்ட்'

சிவகாசி பள்ளியில், மாணவர்களை அடித்த, தலைமை ஆசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகாசியில் வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை வகுப்பில் எட்டாம் வகுப்பு "ஏ' பிரிவு மாணவர்கள் வகுப்பு ஆசிரியை ஜெனதா முன்னிலையில், சத்தமாக பாட்டு பாடி உள்ளனர்.

சதம் அடித்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தில் பாடம் நடக்கிறது : அச்சத்தில் பயிலும் மாணவர்கள்

பந்தலூர் அருகே மண்ணாத்தி வயல் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சிப்பெற்றும், கட்டடம் மற்றும் இட வசதியில்லாமல் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர்.

அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவிப்பு!

தமிழகத்தில், நில பற்றாக்குறை பிரச்னையால், கடந்த 2011ல் இருந்து, அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த பள்ளிகள் மீது, எவ்வித முடிவும் எடுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு : இணையத்தில் இன்று வெளியீடு

பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப் பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் முடிவு, இன்று, இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாகிறது பி.எட்., படிப்பு?

பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஆய்வு செய்து வருகிறது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.

Friday, August 08, 2014

தகுதி இருந்தும் பேராசிரியர் பணி மறுப்பு - டி.ஆர்.பி., செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில்,
மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி ஊக்க தொகை கையாடல்: திருவெறும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்
கல்வி ஒன்றியத்தில் பிளாக்-1ல்
முத்துக்கிருஷ்ணன், பிளாக்-2ல் பர்வீன்
ஆகிய இருவரும் கூடுதல் தொடக்க
கல்வி அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டி.ஆர்.பி., வெயிட்டேஜ் மார்க், தமிழ் வழியில் பயின்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாள்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெளியிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் ஒரு சிலருக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதால்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 முதுநிலை பட்டதாரி தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த
அதிகாரி கூறினார்.

ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்

காலியிடங்களின் பட்டியல் துறைரீதியாக விரைவில் வெளியிடப்படும்

காலியிடங்களின் பட்டியல் துறை ரீதியாக
விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்தின்
இணையதளத்தில் அவ்வப்போது பார்த்து வருமாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி; மாநில செயலர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார்
வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லை: மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை

"தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில்,
அதாவது, 5,720 அரசு பள்ளிகளில்
கழிப்பறை வசதிகள் இல்லை" என, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில்
நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு,
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்" என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில்
காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த
பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான
ஆணை பிறப்பித்துள்ளது.

Thursday, August 07, 2014

TRB Asst Professors Interview Related Information Published

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013 WEIGHTAGE & NOTIFICATION RELEASED

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாத நேர்வுகளில் ஊக்க ஊதியம் அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் உத்தரவு

முதுகலை ஆசிரியர் தேர்வு பொருளியல், இயற்பியல், வணிகவியல் பாடத்திற்கான மறுமதிப்பீடு செய்யபட்ட மதிமதிப்பெண் பட்டியல் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், சான்றிதழ் சரிப்பார்ப்பு 14ம் தேதி முதல் நடக்கிறது

இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு இறுதி பட்டியலும் வெளியாகிவிடும்

இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை  இணையதளத்தில் வெளியிட்டது.

Wednesday, August 06, 2014

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப்., 30 வரை அவகாசம்

அரசு பள்ளிகளில் மாணவர்
சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்.,
30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம்

2016-2017 ஆம் கல்வி ஆண்டில் +1,+2 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டங்கள்

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது, பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி!

இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட
கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம்
முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன.

சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார்
பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்
இணைந்துள்ளன. சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார்
பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்து வருகிறது.

பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்

பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக்
கல்வித் துறைக்கான அனைத்துப்
பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

அனைத்துவகை பள்ளிகளில் 15ம்
தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக்
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தொடர் மதிப்பீட்டு முறை : 9- ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9ம்
வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20 ஆயிரம்
கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த
ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும் தொடர் மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது.

Tuesday, August 05, 2014

''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்'' அறிவொளி

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும்

ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும்; உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல்
திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள
அரசு உயர்நிலைப்பள்ளிகளில்
மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும்
முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளதால்
பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

செப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2
தனித்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வுத்
துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள்,
வரும் 7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று,
பெயரை பதிவு செய்யலாம்' என, தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.

கல்வி அலுவலர் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி : பலன் அளிக்குமா ஆய்வுக் கூட்டங்கள்?

தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர்
பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில்,
மண்டல ஆய்வுக் கூட்டங்கள் பலனளிக்குமா?
என கேள்வி எழுந்துள்ளது. பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்,
70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற
அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்
கூட்டங்களை, மண்டலம் வாரியாக நடத்த
கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
ஆக.,13ல் மேலூர், 18ல் தஞ்சை, 19ல்
புதுக்கோட்டை, 20ல் திண்டுக்கல், 21 கரூர்,
செப்.,1ல் தூத்துக்குடியில் நடக்கும்
கூட்டங்களில் கல்வி அமைச்சர், பள்ளிக்
கல்வித்துறை செயலர், இயக்குனர்
பங்கேற்கின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் மாவட்ட
கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்,
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் என மொத்தம் 120
பணியிடங்கள் உள்ளன. இதில் 60
பணியிடங்கள் காலியாக உள்ளன; மொத்தம்
உள்ள 32 தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடங்களில் 25 இடங்களில் 'பொறுப்பு'
அலுவலர்களே உள்ளனர். கல்வித்
திட்டங்களை ஆய்வு செய்து அமல்படுத்துவது,
அரசு திட்டங்களின் தாக்கம்
குறித்து அரசுக்கு கருத்து தெரிவிப்பதும்
போன்ற முக்கிய
பணிகளை மேற்கொள்வது இவர்கள் தான்.
பல மாதங்களாக இப்பணியிடங்கள் காலியாக
இருப்பதால், மூத்த தலைமை ஆசிரியர்கள்
'பொறுப்பு' அலுவலர்களாக உள்ளனர். இதனால்
பள்ளிகளை கண்காணிப்பதிலும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில்
மண்டல ஆய்வுக் கூட்டங்களால் பலன்
கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம்: அனுமதிக்காகக் காத்திருக்கிறது

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்
அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் கேட்டு டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று,
டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்)
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது

இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி)
பாலமுருகன்தலைமை வகித்தார்.
மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார்.

Monday, August 04, 2014

TNTET தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம்
வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல்
ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர்
தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு!

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் அரசு ஒதுக்கீடு இடங்கள் காலி

பொறியியல் கலந்தாய்வு திங்கள்கிழமையோடு (ஆக.4) நிறைவுபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து ஆயிரத்து 441 பி.இ. இடங்கள் காலியாக உள்ளன.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்

எளிமையான முறையில் ஆங்கிலத்
திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்
அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புரட்சிகள் - தி ஹிந்து

கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த
நிர்வாகத் திறனோடு மிகவும்
புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக்
காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம்.

இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தம்

இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுவதாக தேசிய
கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக
பல்கலைக்கழகத்தின் பேராசிரியை விமலா ராமச்சந்திரன் கூறினார்.

மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தற்காலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் அருகே, 3ம்
வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Sunday, August 03, 2014

தமிழக அரசின்அனுமதி கிடைத்ததும்,உடனடியாக ஆசிரியர்தேர்வு பட்டியல்வெளியிடப்படும்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே,
டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார்.

மாணவர்களிடம் தவறாகநடந்துகொண்டால்,உடனடியாக, 'டிஸ்மிஸ்'கல்வித்துறை எச்சரிக்கை

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள்
நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக
நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என,
கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளி தலைமைஆசிரியர்களுக்குஅறிவுரை!

குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுரை வழங்கப்பட்டது. 

கும்பகோணம் தீ விபத்து: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆஜராக உத்தரவு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

நாளையோடு நிறைவு பெறுகிறது பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளில் 2014-15-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமையோடு (ஆக.4) நிறைவு பெற உள்ளது.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

""தலைமை ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.

'முதல் வகுப்பு மாணவர்களுக்கே மகாபாரதத்தை அறிமுகம் செய்வேன்':உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே

''இந்தியர்கள் தங்களின் பழைய பாரம்பரியங்களை அறிந்து கொள்ள வேண்டும். மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றை, பள்ளிப் பாடத் திட்டங்களில், முதல் வகுப்பிலேயே அறிமுகம் செய்ய வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே கூறினார்.டில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:

ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம்

ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? ஜூனியர் விகடன்

ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி

கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Saturday, August 02, 2014

விதிமுறைகளைப் பின்பற்றாத மழலையர் பள்ளிகள்: மூடுவதற்கு கால அட்டவணை வெளியிட உத்தரவு

அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும்
மழலையர் பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தாக்கல்
செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ஆயிரம் தமிழ்ச் சொற்களை கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி

மாவட்ட தொடக்கப் பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் தமிழில் 5 ஆயிரம் சொற்களை பிழையின்றி, எழுத மற்றும்
வாசிக்கும் வகையில் கற்பிக்க
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது

அரசு, அரசு உதவி பெறும் இலவசக்
காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-
ஆவது வாரத்தில் தொடங்குகிறது

தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000 லிருந்து 7000 ஆகிறது

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிதியில் ஆறு கல்வி திட்டங்கள்

சட்டசபையில், பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர், வீரமணி அறிவித்த
புதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள்,
மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி,
அமல்படுத்தப்பட உள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது

விண்ணப்பங்கள் அனுப்பும்போது,
சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும்
முறை ரத்தாகிறது.இதற்கான
நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்
நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

2014 மே/ஜூன் -ல் நடைபெற்ற பி.எட் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Friday, August 01, 2014

அ.தே.இ - HSC / SSLC தனிதேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது குறித்து கணினி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது

பள்ளிகள் தரம் உயரும் அறிவிப்பு முதல்வருக்கு ஆசிரியI ர் சங்கம் நன்றி!

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக்கல்வி துறைக்கு நடப்பு கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை பள்ளிகள்,

இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்!

இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு!

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா? இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்!

கேள்விகள் 
1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா?.
2.கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது.

தாமதம் : பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம்!

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.

தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல்

ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

பள்ளி மாணவர் இடைநிற்றல் குறைந்துள்ளது: தமிழக அரசு

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முரன்பாட்டு செய்திகள் எது உண்மை?

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் இன்று வெளியீடு!

700 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு ஜூலை 2014 மாத முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!

30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.07.2014) வெளியிடப்பட்டது.இதன்படி அகவிலைப்படி உயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசு ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.