Thursday, October 31, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் 
நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்"
என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில்
வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட
விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் 
நியமனமும், டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம்
 நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு
மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை
எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment