Wednesday, October 23, 2013

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு
ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பொ
து அறிவுத்தாள் 1, 2, 3ஆகியவற்றில் விடைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம். ஒரு பகுதி தமிழிலும் மறு பகுதி ஆங்கிலத்திலும் கூட விடையளிக்கலாம்.
ஆனால் பொது அறிவுத்தாள் 2–ல் உள்ள பகுதி–2 தமிழ் மொழி, அல்லது ஆங்கில மொழி பகுதியை பொறுத்தமட்டில் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து விடை அளிக்க வேண்டும். இது குறித்து சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail,com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மைய தொலைபேசி எண் 1800 425 1002 மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment