Wednesday, October 30, 2013

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்- பயோடேட்டா


Thiru K.C.VEERAMANI
Minister for School Education

School Education Department 
Youth Welfare and   
Sports Development Department






K. C Veeramani
Hon. Minister for School Education
Constituency
Personal details
Born
March 6, 1964 (age 48) 

Political party
Children
3
Residence
கே. சி. வீரமணி (பிறப்பு: 1964) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கும் இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜோலார் பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடும்பம்
இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.

அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது 
குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment