Tuesday, November 19, 2013

அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "10,11,12ம்வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ இடைத்தேர்வுகள் இன்று(நேற்று) துவங்கி உள்ளன. இத்தேர்வு முடிந்து பாட ஆசிரியர் அந்த விடைத்தாளை திருத்தியபின் சில மாணவர்களின் வினாத்தாள் திருத்தப்பட்டதை தலைமையாசிரியர் மீண்டும் சரிபார்ப்பார்.
இடைத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெறும் பள்ளிகளின்
ஆசிரியர்களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சியளிக்கப்படும். அரையாண்டுத் தேர்வில் குறைவான தேர்ச்சிபெறும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2வது வாரத்தில் பயிற்சியளிக்கப்படும். அரையாண்டுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களை இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கும் நோக்கில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் ஒன்றிய வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது. புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவ.,24ல் நடக்கிறது. இதில் வெற்றிபெறும்
மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை அரசு கல்வி உதவி கிடைக்கும்" என்றார்.

No comments:

Post a Comment