Friday, November 22, 2013

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்பெறும் மாணவர்களுக்கு வினா-விடை பயிற்சி ஏடு முதன்மைகல்வி அதிகாரி மூலம்ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பதற்காக வினா-விடை பயிற்சி ஏடு தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும்,10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5ஆயிரத்து 500 உயர்நிலைப் பள்ளிகளும் 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
மொத்தத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருக்கின்றன.
Click here to get DSE Proceeding

இந்த பள்ளிகளில் 7 லட்சம் பிளஸ்-2 மாணவர்களும், 8லட்சம் எஸ்.எஸ்.எல்.சி.  மாணவர்களும் படிக்கிறார்கள். இவர்களில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளை அரசு இறுதித்தேர்வில் தேர்ச்சி அடையச் செய்வதற்கான புதிய வழிமுறையை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தி
உள்ளது. சிறப்பு வகுப்புகள் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில் உள்ள
மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் ஆங்கிலத்தில் பலவீனமாக அதிக மாணவர்கள் இருக்கலாம். ஒரு மாவட்டத்தில்
கணிதத்தில் பலவீனமாக இருக்கலாம். மற்றொரு மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் பலவீனமாக இருக்கலாம். இதை கணக்கெடுத்து அறிய
அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில்
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கைடு தயாரிப்பு அந்த கமிட்டி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் எந்தெந்த பாடத்தில் இருந்து 1 மதிப்பெண்
கேள்விகள் கேட்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை சேகரித்தும், கடந்த சில ஆண்டுகளில் இறுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும்
அதற்கான பதில்களையும் சேர்த்து இன்னும் அவர்கள் தேர்ச்சி பெற எந்த
பாடங்களை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய குறிப்பை பயிற்சி ஏடு போல தயாரித்து உள்ளனர். அதற்கு மெதுவாக படிக்கும் மாணவர்களுக்கான வினா-விடை பயிற்சி ஏடு என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  இந்த கையேடு முதலில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை)  கொடுக்கப்படுகிறது. இதைக்கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். பிறகு மாணவர்களுக்கும் அந்த கையேடு அச்சடித்து கொடுக்கப்பட உள்ளது.
ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சடிக்கப்படுகிறது. சி.டி. வடிவத்திலும்
பள்ளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்பாடு
இந்த ஏற்பாட்டை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்துள்ளனர். இந்த
கையேடுகள் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்றும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment