Monday, November 18, 2013

பணிமாற்றம் செய்தஆசிரியரை மீண்டும் பணியமர்த்தவேண்டும் :குழந்தைகளை பள்ளிக்குஅனுப்பாமல் போராட்டம்!

கரூரில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தகுதி குறைப்பு செய்து
இடமாற்றம் செய்ததால் குழந்தைகளை கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆசிரியர் இடமாறுதல் உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் குழந்தைகளின் பள் ளிச்சான்றிதழை திரும்பப் பெற பெற்றோர்கள்
முடி வெடுத்துள்ளனர்.கரூர் ஒன்றியத்திற்குட் பட்ட சங்கரம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியை யாக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமாரி.
இப்பள்ளியில் குறைந்த அளவிலான குழந் தைகள் மட்டுமே படித்து வந்த நிலையில் ஆசிரியர் குழந்தைகளிடம் தனிக்கவ னம் செலுத்தி பாடம்
நடத்தி சிறப்பாகச் செயல்பட்ட தால் இப்பகுதி மக்கள் இப் பள்ளியில்
தங்களது பிள்ளைகளைச் சேர்த்தனர். தற்போது இப்பள்ளியில் 20 குழந்தைள்
படித்து வருகின் றனர். இந்நிலையில் பெரிய குளத்துபாளையம் பள்ளி யில் பணிபுரிந்த பத்மாவதி என்ற இடைநிலை ஆசிரியை பதவி உயர்வு கோரி நீதி
மன்றத்தில் முறையிட்ட வழக்கில் இவருக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வித்தறை நிர்வாகம் பத்மாவதிக்கு பணியிடம் ஒதுக்கும் போது சோமூர்
நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் அளித்தும், சோமூர் பள்ளியில் பணியாற்றிய சுபா என்ற பட்டதாரி ஆசிரியையை பதவி இறக் கம் செய்து சங்கரம்பாளை யம் பள்ளிக்கும். சங்கரம் பாளையம் பள்ளியில் பணி புரியும் வசந்தகுமாரியை பதவியிறக்கம் செய்து மற்றொரு பள்ளிக்கும் இடமாற் றம் செய்து மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டது. சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியை பதவி இறக்கம் செய்து இடம்மாற்றம் செய்ததை கண்டித்து இப்பகுதி மக்கள் மாவட்ட
ஆட்சியரி டம் மற்றும் கல்வித்துறைக் கும் புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பெற் றோர்கள், மாணவர்களை கடந்த
4 நாட்களாக பள் ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆசி ரியர் இடமாறுதல் உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் குழந்தைகளின் பள்ளி சான்றிதழை திரும்பப் பெற்று வேறு பள்ளிகளில் சேர்த்துவிடுதாக பெற்றோர் கள் எச்சரித்துள்ளனர். பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் ஆசிரியர்கள் மட்டும் பள்ளியில் அமர்ந்து இருந்தனர்.
ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதற்காக, இரு ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்துள்ளதை கண்டித்தும் இதில் நடந் துள்ள முறைகேடு வலியு றுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட் டணி சார்பில் கரூர்
உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவரை யும், உதவி அலுவலரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்வி ஆண்டு முடிவதற்குள் ஆசி ரியர்களை இடம்மாற்றம் செய்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ப தால் இடையில் இடமாற் றம் செய்யக்கூடாது என்ற விதியை கல்வித்துறை கடைப் பிடித்து வரும் வேளையில் கல்வி ஆண்டின் இடையில் ஆசிரியைகளை கரூர் மாவட்ட தொடக்கக் கல்வித்துறை இடம்மாற்றம் செய்தது சக ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் மற்றும் குழந் தைகள் மத்தியில் பெரும் குழப்பத்தை 
ஏற்படுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment