Wednesday, November 20, 2013

"வருங்காலத்திற்கு' வந்த சோதனை : இன்று உலககுழந்தைகள் தினம்!

ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெப் அமைப்பு,  ஆண்டுதோறும் நவ., 20ம் தேதியை, உலக  கு ழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றது.
உலகில் உள்ள  குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வு மற்றும்
பொதுநிலைப்பாட்டை ஏற்படுத்தவும்,  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சுரண்டல்  மற்றும் பாகுபாட்டை நீக்கவும், இந்த தினம்  கொண்டாடப்படுகிறது.
உலகில் அனைத்து வன்முறைக்கும் எளிதில்  ஆளாகுவோர் குழந்தைகள் தான்.  அவர்களுக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டு,  குழந்தைத் தொழிலாளிகளாக, குறைந்த சம்பளத்தில்  கடின வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.  தெருக்களில் வாழும் அவல நிலைக்கும்
தள்ளப்படுகின்றனர். பல நாடுகளில்,  குழந்தைகளிடையே ஆயுத கலாச்சாரம்
பரவி வருகிறது. உள்நாட்டு போர்,  வன்முறை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக,  குழந்தைகளின் உடல் மற்றும் உள்ளம்  பாதிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல், பள்ளிகள் மீதான தாக்குதல்,
கொடுமைப்படுத்தல், கொலை செய்தல் போன்ற தாக்குதல் பெருகி வருவது வேதனை அளிக்கும் விஷயம்.குழந்தைகள் நாட்டின் கண்கள். குழந்தைகளின் மீது செலுத்தப்படும் அநீதி, எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதி. அது வருங்கால உலகை நிச்சயம் பாதிக்கும்.

No comments:

Post a Comment