Wednesday, November 20, 2013

தனித்தேர்வர் விண்ணப்பிக்ககணினி மையம்...திறப்பு! முறைகேடுகளை தடுக்ககல்வித்துறை ஏற்பாடு

விருத்தாசலம்:முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்
தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட கல்வித்துறை சார்பில் வெப் கேமரா வசதியுடன் கனிணி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை பொது தேர்வுக்கு சேலம், ஆத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் டியூஷன் சென்டர்கள் உதவியுடன், இன்டர் நெட் சென்டர்கள் மூலம் முகவரி, மதிப்பெண் விவரங்களை மாற்றி முறைகேடாக ஆன்லைனில் விண்ணப்பித்தது, டி.இ.ஓ., வடிவேலு உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளின் தீவிர சோதனைக்குப் பின்னரே தனித் தேர்வர்களை விண்ணப்பிக்க அனுமதித்தனர். முறைகேடாக விண்ணப்பிக்க வந்த ஏராளமானோர் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், ஏற்கனவே ஒப்படைத்த 15க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. முறைகேடுகளைத் தடுக்க வரும் மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்
தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆல்லைனில் விண்ணப்பிக்க, மாவட்ட கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமாக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் ஆன்லைன் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விருத்தாசலத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் விண்ணப்பிக்க ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் விண்ணப்பிக்க பாத்திமா மெட்ரிக் பள்ளியிலும் கணினி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விருத்தாசலம் டி.இ.ஓ., வடிவேலு கூறுகையில், "கடந்த துணைப் பொது தேர்வின் போது, தனித்தேர்வர்கள் சிலர் முகவரி, மதிப்பெண்
பட்டியலில் திருத்தம் செய்து தனியார் டியூஷன் சென்டர் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பித்தது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து முறைகேடான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது குறித்து "தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியுடன், கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், முறைகேடாக விண்ணப்பித்த 15க்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க, தமிழகம் முழுவதும்
மாவட்ட கல்வி அலுவலகங்கள் சார்பில் தனித் தேர்வர்களை வெப்கேமரா மூலம் படமெடுத்து, விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியற்றவர்கள் அப்போதே நிராகரிக்கப்படுவர். தனியார் மையங்களில் 100 ரூபாய் வாங்குகின்றனர். ஆனால், இந்த மையங்களில் 22 ரூபாய் மட்டுமே வாங்கப்படுகிறது. இன்று முதல் 10 நாட்களுக்கு இந்த மையங்கள் செயல்படும். இதனை, தனித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.

No comments:

Post a Comment