Saturday, November 16, 2013

யூனிகோட் வடிவமைப்பில் பாடப்புத்தகங்கள்!

கேரள மாநிலத்தில், ப்ரீசாப்ட்வேர் இயக்கத்தை உத்வேகப்படுத்தும் வகையில், அம்மாநில பாடப்புத்தகங்களை, உலகளவில் பெறத்தக்க
வகையிலான யூனிகோட் வடிவமைப்பில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி உபகரணங்களையும், copy right இல்லாத அம்சங்களாக மாற்றும் தைரியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
யூனிகோட் வடிவமைப்பில் பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவதால், மாற்றுத்
திறனாளிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டுமே, யூனிகோட் வடிவமைப்பில் மாற்றப்படும். ஏனெனில்,
அனைத்தையும் மாற்றினால், வெவ்வேறான font -களை பயன்படுத்துவதில்
மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவேதான், தேர்வு செய்யப்பட்ட
புத்தகங்கள் மட்டுமே அந்த வடிவமைப்பில் மாற்றப்படுகின்றன.
படிப்படியாக, அனைத்து புத்தகங்களும், யூனிகோட் வடிவமைப்பில் மாற்றப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment