Thursday, November 28, 2013

கடலூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்!

அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 12 வரை 68 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
 அதில், எறுமனூர், புலியூர்சாகை, புதுக்கூரைப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம்,
ஆபத்தாணபுரம், தீர்த்தனகிரி, மோவூர், எடையார், கோட்டேரி ஆகிய
ஒன்பது பள்ளிகளில், மத்திய அரசின் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் 58.12 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகள் துவங்கின. அதில் நான்கு வகுப்பறைகள், ஆ#வகங்கள்,
ஓவியக்கூடங்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சா#தளம்
கட்டப்படுகின்றன. ஆனால், கட்டுமான பணிகளுக்கு இடைநிலைக் கல்வி இயக்கம் ஒதுக்கிய நிதி பற்றாக்குறையால் எறுமனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக்கான சா#தளம் அமைக்காமல் வகுப்பறை மட்டும் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம், புதுக்கூரைப்பேட்டை, எடையார், கோட்டேரி உள்ளிட்ட பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதனால், தரம்
உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் வகுப்பறைக் கட்டடங்களை கட்டி முடிக்காததால், இட வசதியின்றி மாணவர்கள் திறந்த வெளி, மரத்தடியில் படித்து வருவதால், அவதியடைகின்றனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசின் இடைநிலைக் கல்வி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு மத்திய அரசின் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் நிதி ஒதுக்கி கடந்த 2009 -10ம் ஆண்டு வகுப்பறை கட்டுமானப் பணி துவங்கியது. ஒதுக்கிய நிதி நான்கு வகுப்பறைகள், ஒரு ஆ#வகம், ஓவியக் கூடம், மாற்றுத்திறனாளி சா#தளம் கட்டுவதற்கு போதுமானதாக இல்லை. இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன' என்றார்.

No comments:

Post a Comment