Wednesday, November 20, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி

மணப்பாறை, : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வள மையம் சார்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி நடந்தது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அடிப்படைத்திறன்களான படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித
செயல்பாடுகளை செய்தல், நினைவாற்றலை மேம்பட செய்தல் ஆகியவற்றில் தரத்தை உயர்த்த பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின்போது உச்சரிப்பிற்கு முக்கியத்துவம்
தரவேண்டும். கவனச்சிதைவு ஏற்படாமல் இருத்தல், வாசித்தலில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளும்
தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கணித செயல்பாடுகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த சிறப்பாக பயிற்சிகள் அளிக்க
வேண்டும். புதிர்கள், வினா-விடை -வாழ்க்கை கணக்குகள் மற்றும் விளையாட்டு வழிக் கல்வியின் மூலம் கல்வியின் தரம் மேம்பட
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். அவர்களின்
செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து மதிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டது. மடிக்கணினி மற்றும் தலைமேல் படவீழ்த்தி மூலம்
ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் உச்சரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர்
குணசேகரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்ணன், சிவக்குமார், ஹேமலதா, வனஜா மற்றும் சிறப்பாசிரியர்கள் நடத்தினர். இதில் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 130 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment